பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 67.1 பாமாலை, விராலி மலை தோத்திரப் பா மாலை, திருப்பரங் கிரித் தோத்திரப் பாக்கள், திருச் செந்தூர்த் தோத்திரப் பாக்கள், பழநி தோத்திரப் பாக்கள், வேல் பத்து, மயில் பத்து, அடைக்கலப் பத்து-ஆகியன. பன்னிரு திருமுறைத் திரட்டும் சைவத் தோத்திர மஞ்சரியும் உள்ளுறை: 12 திருமுறைகளிலிருந்து பாடல்கள், விநா யகர் அகவல், திருமுருகாற்றுப் படை, கந்தர் கலி வெண்பா, சில திருப்புகழ்கள், கந்த புராணம்-அபிராமி அந்தாதி முதலிய நூல்களிலிருந்து சிற்சில பாடல்கள் - ஆகியவற்றின் தொகுப்பு. 400 பக்கங்கட்கு மேற்பட்ட நூல். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள். இது, திருமலை ராயன் பட்டினம் கு.சா.சு. சுப்பிரமணிய முதலியார் மணிவிழாமலர். தொகுப்பு: க. சோமசுந்தரம் செட்டியார், வெளியீடு : சா.சு, நடேச முதலியார், கரையேற விட்ட நகர் நூல் திரட்டு அப்பரடிகள் கடலிலிருந்து கரையேறிய ஊரான வண்டிப் பாளையம் என்னும் கரையேற விட்ட நகர் மீது பாடிய நூல் களின் திரட்டு. வெளியீடு-கற்பக விநாயகக் கடவுள் தரும கைங்கரியம்-சு.சொக்கலிங்கம் பிள்ளை. கலா ரத்ன அச்சியந் திர சாலை, சென்னை. சோபகிருது-புரட்டாசி. நூல்கள்: சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமி கள் இயற்றிய கரையேற விட்ட நகர் கற்பக விநாயகர் இரட்டை மணி மாலை, திருநாவுக்கரசர் நவமணி மாலை, வா. இராசப்ப முதலியார் இயற்றிய கற்பக விநாயகக் கடவுள் பஞ்ச ரத்தினம்-முதலிய நூல்களின் திரட்டு இது. சங்கரலிங்கம் பிள்ளை பிரபந்தத் திரட்டு ஆசிரியர்-சங்கரலிங்கம் பிள்ளை, மேல வீர ராகவ புரம், நெல்லை. ஆரியப் பிரகாசினி அச்சுக் கூடம், நெல்லை. 1887. உள்ளுறை : அகத்தியர் தோத்திரம், சொர்ன வயிரவி மாலை, பஞ்ச ரத்தின வராகி-முதலியன.