பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 71 புதிய உரை: உலகில் வாழும் மனிதர் ஒழுக்கமான காரியங்களில் பற்று வைத்து நடக்க வேண்டும். அதுவே புகழ்தரும். உயிர் வாழ்விற்காக மற்ற துன்பங்களிலிருந்து தப்பிக்க விரும்புபவர், குற்றம், இகழ்ச்சி, பொல்லாங்கில் அகப்படுவர். விளக்கம்: அறன் சிறப்பு பற்றிய அதிகாரத்தில் இது பத்தாவது பாடல். ஒழுக்கத்தில் பற்று வைத்து தெளிந்த அறிவுடன் சிறந்து வாழ்பவர் அறன் என்று பெருமைப்பட அழைக்கப்படுகிறார். அதனால் தான் அறனே என்று ஏகாரமிட்டு புகழ்ந்து அழைக்கிறார் வள்ளுவர். உயிர் வாழ்வதற்காக அறச் செயல்களிலிருந்து தவறி, மறங்கள் செய்து, அவற்றிலிருந்து விடுபடதனது மதியை பயன்படுத்தினால், கிடைப்பது கேடும் அவமானமும்தான். ஆக, அறன் என்பது எந்தச் சூழ்நிலையிலும் உடல்காக்கும் நல்லற காரியங்களிலிருந்து நழுவி விடக்கூடாது என்று நயம்பட விளக்குகிறார்.