பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

do while

480

downlodable font


மாறுபாடுகளில் ஒன்றான சுற்று அமைப்பு. ஒரு குறிப்பிட்ட பணியைத் திரும்பத் திரும்பச் செய் வதற்காக, ஓர் நிரலாக்கத் எழுதப்படும் தொடரின் பழைய தொடரில் கட்டளை அமைப்பு.

do while : அப்போதெல்லாம் செய் : அமை க்கப்பட்ட நிரலாக்கத் தொடர்முறையின் மாறு பாடுகளில் ஒன்றான பழைய சுற்று முறை.

dow jones information service : டோ ஜோன்ஸ் தரவுப் பணியம் : பங்கு போன்ற நடப்பு நிதி யியல் செய்திகளைக் கொண்டிருக்கிற ஒரு கணினி தரவுத் தளம். இதனை, சந்தாதாரர்கள், துண்கணினிகள், மோடெம்கள் மூலம் அணுகலாம்

down : செயலிழந்த நிலை : மென்பொருள் அமைப்பில் தவறு ஏற்படுவதால் அல்லது வன்பொருள் மின்சுற்றுகள் செயல்பட முடியாமல் குறிக்கும். ஒரு கணினி செயலிழந்த நிலை என்றால் அது செயல்பட வில்லை என்பதே பொருள்

down arrow : கீழ்நோக்கு அம்புக் குறி.

down line processor : துணை நிலைச் செயலகம் : செய்தித் தரவு தொடர்புக் கட்டமைப்பின் முகப்பு முனையில் அல்லது அதற்கு அருகில் இருந்து தரவுகளை அனுப்பி வைக்கும் செயலகம்.

down link : தரை இணைப்பு : பூமியிலுள்ள ஒரு நிலையத்துடன் ஒரு செயற்கைக்கோளி லிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள செய்தித்தொடர்பு வழி. இது, 'வான்இணைப்பு' (Uplink) என் பதிலிருந்து வேறுபட்டது.

down load : கீழிறக்கு : தரவு இறக்கம் : தரவுவை, பெரிய மையக் கணினி பிலிருந்து சிறிய, தொலைதூர கணினி அமைப்புக்கு மாற்றும் செயல்முறை.

downloadable font : பதிவிறக்கத்தகு எழுத்துரு : ஓர் ஆவணத்தை அச்சிடும்போது, அந்த ஆவணத்தின் தரவு, அச்சுப் பொறியின் நினைவகத்தில் ஏற்றப்படும். அச்சுக்குரிய எழுத் துருவும் கணினியின் நிலை வட்டிலிருந்து அச்சுப் பொறிக்கு அனுப்பப்படும். பதிவிறக்கத் தகு எழுத்துருக்கள் மிகப்பரவலாக லேசர் அச்சுப் பொறிகளிலும் பக்க அச்சுப் பொறிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சில புள்ளியணி அச்சுப் பொறிகளும் இத்தகைய எழுத்துருக்களை ஏற்கின்றன.