paint programme
1073
palette register
இயக்கப் பாதையினைக் காட்சியாகக் காட்டுதல். 2. கணினி வரைகலையில் தேர்ந்தெடுத்த பரப்பினை ஒரு திண்ணிய வண்ணத்தால் நிரப்புதல். 3. ஒரு காட்சித்திரையில் வரைகலைத் தரவுகளைக் காட்சியாகக் காட்டும் செய்முறை.
paint programme : வண்ணப்படுத்தும் நிரல்தொடர் : வரை கலை பலகை அல்லது சுட்டியைப் பயன்படுத்தித் திரையில் ஒவியம் வரைவதுபோலச் செய்யும் வரைகலை நிரல் தொடர். ராஸ்டர் கிராஃபிக் உருவங்களை வண்ணப்படுத்தும் நிரல் தொடர் மூலம் உருவாக்கலாம்.
PAL : பிஏஎல் : "நிலை மாற்ற வரி" எனப் பொருள்படும்"Phase Alternation Line"என்ற ஆங்கிலச் சொல்லின் தலைப்பெழுத்துச் சுருக்கம். பெரும்பாலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் வண்ணத் தொலைக் காட்சிப் பொறியமைவு.
palatino : வண்னத் தட்டு : பல போஸ்ட்ஸ்கிரிப்ட் லேசர் அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படும் உள்ள்மைந்த அச்செழுத்து.
palette : வண்ணத் தொகுதி;வண்னத் தட்டு : ஒரு கணினி வரைகலைப் பொறியமைவில் அமைந்திருக்கக்கூடிய வண்ணங்களின் தொகுதி.
palette code : வண்ணத் தட்டு குறியீடு : கிடைத்துள்ள வண்ணத்தட்டி லிருந்து குறிப்பிட்ட நிறத்துடன் தொடர்புள்ள ஒரு எண்.
palette register : வண்ணத் தட்டு பதிவேடு : ஈஜிஏ (EGA) அல்லது பிசிஜே ஆரில் உள்ள 16 பதிவேடுகளில் ஒன்று. காட்சி நினைவகத்தில் வருகின்ற நிறத்திற்குத் தொடர்பான நிறத்தைத் திரையில் காட்டுகின்ற பதிவேடு.
68