பக்கம்:மதன கல்யாணி-3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மதன கல்யாணி தக்க பிரபுத்துவமும் கண்ணியமும் வாய்ந்த பெருத்த தனிகர்; எங்களுடைய வர்த்தகத்தை நடத்த சென்னப்பட்டணத்தில் ஒரு முதலாளி இருப்பது அவசியமாக இருப்பதால், இவர்கள் அங்கேயே ஜாகை வைத்துக் கொண்டு இருக்க வந்திருக்கிறார்கள்; இவர்களுக்கு அறிமுகமானவர்கள் அந்த ஊரில் எவருட்ை இல்லை ஆகையால், தாங்கள் இவர்களுக்குத் தேவையான செளகரியங் களையும் சகாயங்களையும் செய்து கொடுக்குமாறு நிரம்பவும் கேட்டுக் கொள்ளுகிறேன். ". அது நிற்க, என்னுடைய குழந்தைகளினுடைய சவரகூடிணைக் காக நான் தங்களிடத்தில் ஒப்படைத்து வைத்திருக்க ஐந்து லட்ச ரூபாய்க்கு நான் கணக்குக் கேட்டதற்குத் தாங்கள் தருவதாக நெடுங் காலமாகச் சொல்லி கொண்டே வந்து, கடைசியாகத் தாங்கள் எனக்கெழுதிய கடிதத்தில், கணக்குகள் மிகவும் சிக்கலாக இருப்பதால், நாமிருவரும் நேரில் கண்டு பேசி அதை பைசல் செய்து கொள்வதே செளகரியமானதென்றும், அப்படிப்பட்ட சந்தர்ப்பம் வாய்க்கும் போது; கணக்குகளை எல்லாம் ஒப்புக் கொடுப்பதாகவும் எழுதினர்கள்; அப்படி நீங்கள் எழுதி ஐந்து வருஷ காலமாகிறது! என்னுடைய உயிருக்குயிராக இருந்த என் சம்சாரத்தையும், கந்தருவக் குழந்தைகள் போலிருந்த என் செல்வக் குதலையர்களையும் நான் பறிகொடுத்த இடமாகிய அந்த சென்னப் பட்டணத்தின் முகத்தில் நான் இனி விழிக்கிறதே இல்லை என்று உறுதி செய்து கொண்டிருந்தது பற்றி நானே நேரில் வந்து கணக்குகளைப் பைசல் செய்து கொள்ளக்கூடாமலிருக்கிறது; தாங்கள் இங்கே வருவதும், நான் எதிர்பார்க்கத் தகாத பெருத்த விஷயம்; ஆகவே, என்னுடைய நண்பரும் கூட்டாளியுமான இந்தச் செட்டியாரவர்களிடத்தில் தாங்கள் என்னுடைய கணக்கு களை எல்லாம் ஒப்புக்கொடுத்து மிகுதியுள்ள பணத்தையும் செலுத்திவிடக் கேட்டுக் கொள்ளுகிறேன். அடிக்கடி தங்களுடைய கூேடிமத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள மிகுந்த அவாவுள்ள, தங்களுடைய ஆப்த நண்பன், சோமசுந்தர-துரை -என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த சிவஞான முதலியார் தம் மனத்திற்குள் கவலை அடைந்தார் ஆனாலும், வெளித்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/8&oldid=853481" இலிருந்து மீள்விக்கப்பட்டது