பதிப்புரை
மூவர் தமிழ், தனித் தமிழின்கண் உறுதிப்பொருள் மூன்றும் முறையான் உணர்த்தப்படுகின்றன். அவை, இன்பமும், பொருளும். அறமுமாம். முதல்" மூன்று (சம்பந்தர்) திரு முறைகள் இன்பப் பகுதியாகும். ச, டு, சு ஆகிய (அப்பர்) மூன்று திருமுறைகளும் பொருட்பகுதி, ஏழாம் (ஆரூரர்) திருமுறை அறத்தின் பகுதி. 'இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு' (தொல். பொருள் - களவியல்-க) என்னும் வைப்புமுறை வாழ்க்கை முறையாகும். மக்களது எத்திற முயற்சிக்கும் முதலாக (காரணம்) நிற்பது இன்ப வேட்கையேயாம். இன்ப வேட்கையில்லையாயின் அறிவும் இல்லையாகும்.
'எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற் றாகும்’ -தொல். பொ. பொ. உக
என்னும் தொல்காப்பிய நூற்பாவான் உணரலாம். இம் முறையில் திருவாசகம் தனித்தமிழ் மறை முடிபாகும். இஃது அறத்தின் முடிநிலையாகும். இதனோடுஇணைந்த 'திருச்சிற்றம்பலக் கோவையார்' பெரும்பேறாகும்.
இத் திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை' 'தணிகைமணி, ராவ்பதுார், டாக்டர் திரு. வ. சு. செங் கல்வராய பிள்ளை எம் ஏ அவர்கள்’’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நற்றவப் பேறுடைய நல்லாரால் யாக்கப் பட்டதாகும். இவ்வருளாளர் திருமுறைகள் ஏழிற்கும் 'ஒளிநெறியும்’ “ஒளி நெறிக்கட்டுரைகளும்' எழுதியுள் ளார்கள் அவைகள் கழகவாயிலாக வெளிவந்துள்ளன.
இதுபோல் எட்டாந்திருமுறையாகிய 'திருவாசகத் துக்கும்' 'ஒளிநெறியும்'. 'ஒளிநெறிக் கட்டுரையும்’ எழுதியுள்ளார்கள். அதுபோல் திருக்கோவையாருக்கும் 'ஒளிநெறி' எழுதியுள்ளார்கள். அதுவும் கழக வாயிலாக வெளிவந்துள்ளது. இப்பொழுது இச்