49 உண்மையான குயில் சீன ராஜ்யத்திற்குள் வரக்கூடாது என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்குப் பதிலாகச் செயற் கைக் குயிலே அரண்மனையில் செல்லமாக விளங்கி வந்தது. சக்கர வர்த்தியின் பள்ளியறைப் பக்கத்திலேயே அது பட்டு மெத்தைமேல் இருந்து வந்தது. அதற்காகப் பலர் அளித்த விலையுயர்ந்த பொன் அணிகளும், பிற பொருள்களும் அந்த மெத்தையிலேயே பரத்தி வைக்கப்பட்டிருந்தன. அங்தக் குயிலுக்குப் பள்ளியறைப் பாடகர் திலகம் என்ற பட்டமும் அளிக்கப்பட்டது. சங்கீத வித்துவான் செயற்கைக் குயிலைப் பற்றி இருபத் தைந்து நீண்ட நூல்களே எழுதினர். சீன மொழியே கஷ்டம், அதி லும் கடினமான சொற்களைப் பொறுக்கித் தொகுத்திருந்தார் வித்துவான். அந்த நூல்கள் பிறருக்குப் புரிவது அரிது. ஆயினும் பலர் அவைகளைப் படித்துப் புரிந்து கொண்டதாக வெளியே சொல் லிக் கொண்டனர். இல்லையெனில் அவர்கள் அறிவிலிகள் என்று கீழே தள்ளி மிதிக்கப் பெற்றிருப்பார்கள். இவ்வாறு ஒர் ஆண்டு கழிந்தது. இயங்திரக் குயில் இன்னது தான் பாடுகிறது என்பது சக்கரவர்த்திக்கும், அவருடைய சபையோ ருக்கும், மற்றும் பலருக்கும் மனப்பாடமாகி விட்டது. இதல்ை அவர்கள் அதை அதிகமாக நேசித்தார்கள்; அது பாடும் பொழுது தாங்களும் அதனுடன் சேர்ந்து பாடினர்கள் - சக்கரவர்த்தியும் பாடினர் |
பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/49
Appearance