உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


ஒருநாள் இரவில் பெரும்புயலும் மழையும் சேர்ந்து வந்தன. இடியும் மின்னலும் பயங்கரமாயிருந்தன. வானமே பொத்துக் கொண்டு பொழிவதுபோல் கனத்த மழை பெய்து கொண்டிருந்தது. அந்த மழைக்கு நடுவே நகரக் கோட்டை வாயிலின் கதவை யாரோ தட்டும் ஒசை கேட்டது. அரசர் தாமே கதவைத் திறப்பதற்காக எழுந்து சென்றார்.

வெளியே நின்று தட்டியது ஓர் இளவரசி. அவள் கூந்தலி லிருந்தும், உடைகளிலிருந்தும் மழைநீர் வடிந்து கொண்டிருந்தது. உடல் முழுதும் நனைந்திருந்தது. அவள், தான் ஓர் உண்மையான இளவரசி என்று தெரிவித்துக் கொண்டாள்.