பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அறிவுக்கு உணவு


முன் நிறுத்தினால் போராட்டங்கள் உண்டாகும். மொழியை முன் நிறுத்தி அனைவரும் தமிழராய் ஒன்றுபட்டால் முன்னவை அனைத்தும் சாகும்.


குறிக்கோள்

விழிப்பு நிலையில் மட்டுமின்றி, உறக்க நிலையிலுங்கூட உன் குறிக்கோளை நீ மறந்துவிடாதே. மலைகளில் மேய்கின்ற ஆடுகளின் மணி ஓசையைக் கேட்டுக்கொண்டே தான் இடையர்கள் உறங்கிக் கொண்டிருப்பார்கள்.


வெல்ல இயலாது

பொறுமையுள்ள மக்களைப் படபடப்புக்காரர்களால் ஒருபோதும் வெல்ல இயலாது. காரணம், படபடப்பு வலியற்றது என்பதே.


எளிது

சொல்லியபடி செய்வது கடினமன்று; மிக எளிது! ஆனால், சொல்லும்போது யோசித்துச் சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும்.


வளைந்து கொடு

முரடர்களின் தாக்குதலை அழித்து ஒழிக்க எதிர்த்து நிற்பதைவிட, ஒதுங்கி நிற்பது நல்லது. வெள்ளப்பெருக்கின் தாக்குதலிலிருந்து எப்படி உயிர் தப்பினர்கள் என்று, ஆற்றங்கரையில் நிலைத்து நிற்கும் நாணற்செடிகளை நோக்கி வேரொடு வீழ்ந்துவிட்ட புளிய மரங்கள் கேட்டுக் கொண்டு


வைக்குமிடம்

வைரத்தை இரும்புப் பெட்டியில் வை. நம்பிக்கையை யோக்கியனிடத்தில் வை. இன்றேல், ஏமாற நேரிடும்!


அமைதி

ஒவ்வொருவனும் இன்பமயமான அமைதியைப் பெறவே ஆசைப்படுகிறான்; உழைக்கிறான். ஆனால், வெற்றி பெறுவதோ வாழ்நாளில் அன்று, சாவுநாளில்!