உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

 மீண்டும் ஒரு குச்சி பொருத்தப்பட்டது. சுற்றிலும் ஒளி பரவி விட்டது. பின்புறம் இருந்த சுவரில் ஒளி வீசியவுடன், சிறுமி சுவரை ஒரு மெல்லிய திரையாகக் கருதி, விட்டினுள் இருப்பவையெல்லாம் தன் கண்ணுக்குத் தெரிவதாக எண்ணிக்கொண்டாள். அங்கே ஒரு மேசைமீது தட்டுத் தட்டாகப் பண்டங்கள் இருந்தன. ஒரு பெரிய தட்டில் வாத்து ஒன்று பொரித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் மேலும் வியப்பு என்னவென்ருல், அந்த வாத்து, மேசையிலிருந்து துள்ளிக் கீழே குதித்து, அவள் பக்கமாக உருண்டு வருவதாகத் தோன்றியதுதான் வாத்தின் உடலுள் ஆப்பிள் முதலிய கனிகளும் வைக்கப்பட்டிருந்தன. வாத்து தன்னிடம் வந்ததாக அவள் எண்ணிய வுடன் தீக்குச்சி அணைந்துவிட்டது. மீண்டும் ஒரே இருள். பின் புறம் வெறும் சுவரைத் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. அவள் மறுபடி ஒரு குச்சியைப் பொருத்தினுள். வீடுகளில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்காக வைக்கும் அலங்காரம் செய்த மரம் ஒன்றின் அடியில் தான் அமர்ந்திருப்பதாக அவளுக்குத் தோன் றிற்று. சென்ற வருடம் செல்வச் சீமான் ஒருவருடைய வீட்டில் கண்ணுடிக் கதவு வழியாக அவள் பார்த்திருந்த கிறிஸ்மஸ் மரத்தை விட இது மிகப் பெரிதா யிருந்தது. பச்சை இலைகளுடன் விளங்கிய அதன் கிளைகளில் ஆயிரம் மெழுகு வத்திகள் எரிந்துகொண் டிருங் தன. பக்கம் பக்கமாகப் பல வண்ணப்படங்களும் வைக்கப்பட் டிருந்தன. சிறுமி அவைகளைக் கண்டு தன் இரு கைகளையும் மீட்டி ள்ை. அதற்குள் தீக்குச்சி அனைங்து போய்விட்டது. அவள் கண்ட நூற்றுக்கணக்கான மெழுகு வத்திகளும் சிறிது சிறிதாக உயரே எழும்பி வானம்வரை சென்றன. அங்கே அவைகள் ஒளி வீசும் கட்சத் திரங்களாக அமைந்து நிற்பதையும் அவள் கண்டாள். அந்தத் தாரகைகளில் ஒன்று கீழே விழுந்தது; அப்பொழுது வானிலிருந்து கெருப்பு மயமான பேரொளி ஒன் று பூமிக்கு இறங்கி வருவது போலிருந்து. சிறுமி, இப்பொழுது யாரோ ஒருவர் இறந்துபோகின்றனர். என்று சொன்னுள். ஏனெனில் அவளுடைய பாட்டி, ஒரு கட்சத்திரம் உதிரும்பொழுது, ஓர் ஆவி கடவுளிடம் போய்ச் சேர்கிறது என்று முன்பு சொல்லியிருந்தாள். அந்தப் பாட்டி ஒருத்திதான் இந்த உலகில் அச்சிறுமியிடம் அன்பு கொண்டிருந்தவள். அவளும் போய் விட்டாள்!