74 சுமந்து செல்லும்! என்ருன். அவன் சொன்னபடியே அதன்மீது ஏறிக்கொண்டு, சாலை வழியாக அதை ஒட்டிச் சென்ருன். ஆடு ஜில், ஜில்" என்று வேகமாக ஒடிற்று. அவன் ஆனந்த மாகப் பாடிக்கொண்டிருந்தான். மூத்தவர் இருவரும் சவாரி செய்யும் பொழுது ஒருவருக் கொருவர் எதுவும் பேசவில்லை. ஒவ்வொருவனும் தான் கற்றவைகளை நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. இளவரசி முன்பு பேசவேண்டிய விஷயங்களே அவர்கள் மனத்திலே முறையாகத் தொகுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அவர்களைத்தொடர்ந்துகில்லாடியும்போய் நெருங்கிவிட்டான். டோய், என் கையிலே என்ன இருக்கிறது என்பதைப் பாருங்கள்; இதை நான் வழியிவே கண்டெடுத்தேன்! என்று அவன் கூவினுன். அவனுடைய இடதுகையிலே செத்துப்போன காக்கை ஒன்றிருந்தது. 'கில்லாடி, இதைக் கொண்டு நீ என்ன செய்யப் போகிருய் : என்று அவர்கள் கேட்டார்கள். "இதை கான் இளவரசிக்கு கொடுப்பேன்! இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே அவர்கள் போய் விட்டனர்.
பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/74
Appearance