75 சிறிது துாரம் சென்றபின் கில்லாடி மறுபடியும், டோய், இங்கே பாருங்கள் என்று கூப்பிட்டான். சகோதரர்கள் திரும்பிப் பார்த்து, கில்லாடி, இது என்னது? மரத்தினல் செய்த ஜோடு அதிலும் மேல் பகுதி உடைந்து போய் விட்டது. இதையும் இளவரசிக்கா கொடுக்கப் போகிருய்? என்று கேட்டனர். m ஆமாம், இதுவும் அவளுக்குத்தான் சகோதரர்கள் மீண்டும் சிரித்துக்கொண்டே சவாரி செய்தனர். சிறிது நேரத்திற்குப் பின் தம்பி மீண்டும் சகோதரர்களைக் கூப்பிட்டான். இங்கே பாருங்கள், ஆச்சரியமான பொருள் ! என்ருன். + 'இந்தத் தடவை என்ன கொண்டு வந்திருக்கிருய் ' "இளவரசி இதைக் கண்டு மகிழ்ச்சியடைய மாட்டாளா? 'இது என்னடா, வெறும் மணல்தானே ஓடைக் கரையில் அள்ளி வந்திருக்கிருய் 1, ஆமாம், இது மணல்தான், ஆளுல் பொடி மணல் ! கையிலே வைத்திருக்க முடியாது, கழுவிக் கீழே உதிர்ந்துவிடும் 1 சட்டைப் பைகள் இரண்டிலும் இந்த மணலை நிறையச் சேர்த்து வைத்திருக் கிறேன்.' - மூத்தவர் இருவரும் குதிரைகளை விரட்டிக் கொண்டு வேகமாகச் சென்ருர்கள். கில்லாடிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர்கள் நகர வாயிலை அடைந்துவிட்டனர். திருமணப் போட்டிக்காக வந்தவர்களுக்கு வாயிலில் வரிசைக் கிரமமாகச் சீட்டுகள் கொடுக்கப்பட்டன. முதலில் வந்தவருக்கு முதல் சீட்டு, பிந்தி வந்தவர்களுக்கு அந்தந்த நேரப்படி சீட்டுகள் வழங்கப்பட்டன. போட்டியாளர் அனைவரும், ஒரு வரிசைக்கு ஆறு பேர்கள் வீதம், ஒருவர் பின் ஒருவராக நின்றனர். ஒவ்வொரு வரிசை யையும் ஒட்டிற்ைபோல மற்றவரிசைகளும் நிறுத்தப்பட்டன. இது ஒரு நல்ல ஏற்பாடு. இல்லையெனில், கைகால்களை நீட்ட மடக்க இட மிருந்தால், போட்டிக்காரர்கள் ஒருவரை ஒருவர் பிய்த்தெறிந்திருப் பார்கள். ககர மக்கள் அரண்மனையைச் சுற்றித் திரளாக வந்து குழுமியிருந்தனர். சாளரங்கள் தோறும் தலைகள் உள்ளே நடப்பதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தன. முக்கியமாகப் போட்டியாளர்
பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/75
Appearance