பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 களிடம் இளவரசி என்ன பேசுகிருள், எப்படிப் பேசுகிருள், என் பதைக் காணுவதிலேயே மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். போட்டியில் கலந்துகொண்டவர்கள் வெளியே எவ்வளவு செளடாலாகப் பேசிலுைம், உள்ளே இளவரசி இருந்த அறைக்குள் கால் வைத்தவுடன் வாயடைத்துப் போயினர். அத்தகையவர்களே இளவரசி, பயனில்லை! அடுத்தவர்!" என்று சொல்லி அனுப்பிவிட் டாள். அகராதியைக் கரைத்துக் குடித்த சகோதரனுடைய முறை வங் தது. அவன் வெளியில் வரிசையில் கிற்கும்பொழுதே அதெல்லாம் மறந்துபோய்விட்டது. அறையினுள் தரையில் கால் வைக்கும் பொழுதே வழுகிற்று. மேல் தளமெல்லாம் இரசம் பூசிய கண்ணுடி கள் பதிக்கப்பட்டிருந்ததால், அவன் தலைகீழாக நிற்பது போன்ற பிரதிபிம்பங்கள் தெரிந்தன. ஒவ்வொரு சாளரத்திலும் மூன்று நிருபர் களும், ஓர் அதிகாரியும் அமர்ந்திருந்தனர். அறையினுள் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும். பேச்சையும் அவர்கள் உடனுக்குடன் எழுதி வெளியே அனுப்பி வந்தார்கள். அவை விரைவில் பத்திரிகை யில் அச்சாகி, சிறிது நேரத்தில் தெருக்களில் விற்பனைக்கு வந்து விடும். குளிர் காய்வதற்காக உள்ள கணப்புச் சட்டிகளில் நெருப்பு அதிகமாக்கப்பட்டு, அறை முழுவதும் கொதிப்படைந்திருந்தது. "இளைஞன் இளவரசியைப் பார்த்து, இங்கே மிகவும் சூடா யிருக்கிறது!’ என்று சொன்னன். 'இன்று என் தங்தையார் கோழிக் குஞ்சுகளை வாட்டிக்கொண் டிருக்கிருர், அதுதான் காரணம், என்ருள் இளவரசி. அவ்வளவுதான் என்ன,பேசுவதென்று தெரியாமல் கின்ருன் இளைஞன். இத்தகைய பேச்சை அவன் எதிர்பார்க்கவில்லை. மிக வும் சாதுரியமாகப் பேசவேண்டும் என்று அவன் எண்ணிய நேரத் தில், வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வெளிவர மறுத்தது. பயனில்லை, இவரை அழைத்துப் போங்கள்' என்று சொல்லி விட்டாள் இளவரசி, அடுத்தாற்போல் இரண்டாவது சகோதரன் உள்ளே சென் ருன்; சென்றதும், இங்கே பயங்கரமான வெப்பம் இருக்கிறது!’ என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/76&oldid=736224" இலிருந்து மீள்விக்கப்பட்டது