பக்கம்:அலைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள் O 97



“இருங்கோ; நான் யாரையாவது அழைச்சுண்டு வரேன்-"

"வேண்டாம், வேண்டாம்." பின்னாலிருந்து அவர் குரல் அவசரமாய்த் தடுத்தது.

"இல்லை ஒரே நிமிஷம்!”

"ஆணையாச் சொல்றேன் ; போகாதே! எனக்குச் சரியாய்ப் போய்விட்டது. நானே போகிறேன்.'”.

"ஆணையென்றதும் நான் திகைத்துத் திரும்பினேன். அவர் கையை ஊன்றி எழுந்து சற்றுத் தள்ளாடிய மாதிரி கரை மேட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.

"நான் வெகுநேரம் நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தேன்,

"ஜலத்தகட்டில் நாங்கள் கிளப்பிய விதிர் விதிர்ப்பையும், கற்கள் விழுந்த இடத்தின் சுழிப்பையும் நான் வாங்கிக் கொண்டு விட்டேனா?

"அன்று இரவு சாப்பாட்டிற்கு அவர் வரவில்லை. அப்புறமே எங்கள் வீட்டுப் பக்கம் அவர் வரவில்லை, அவசரமாய் ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டதாய்த் தெரிய வந்தது.

"ஒரு வாரம் கழித்து, யாரோ வந்து அவர் பேரைச் சொல்லி அப்பாவிடமிருந்து ஜாதகம் மாற்றிக் கொண்டு போனார்கள். அப்புறம் ஒரு தகவலும் இல்லை. அப்பா பார்த்ததில் ஜாதகங்கள் பொருந்தவில்லை.

“இங்கு என்னைப் பார்த்ததும் அவருக்கு அதிர்ச்சியாய்த் தானிருந்திருக்கும் பரவாயில்லை. சமாளித்துக்கொண்டு விட்டார். இன்று ஊருக்குக் கிளம்புகையில், மெனக்கெட்டு, உங்களிடம் சொல்வி என்னை வரவழைத்து எனக்கு நமஸ்கரித்ததே, அன்று குளத்தங்கரையில் தன் மனம் திறந்துவிட்டதற்கு மன்னிப்புக் கேட்கத்தானோ என்னவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/99&oldid=1288254" இலிருந்து மீள்விக்கப்பட்டது