உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52 O லா. ச. ராமாமிருதம்


“எதுபோலுமில்லை. பழைய இடத்தில் வந்து புதிதாகப் பொருந்திக் கொண்டிருக்கிறேன்.”

“என்ன சொல்றேள்?” விழித்தாள். “புரியல்லியே!”

அவள் திகைப்பைக் கண்டதும் எனக்கு வாய்விட்டுச் சிரிப்பு வந்துவிட்டது. .

“உனக்குப் புரியத் தேவையில்லை. பயப்படாதே. எனக்குக் காக்காவலிப்பு இல்லை. காற்று சுகமாயிருந்தது கண்ணயர்ந்து போச்சு, அவ்வளவுதான். இங்கு நீ எங்கே வந்தாய்?”

“மலைமேல் விளக்குப் போடவந்தேன். நான்தான் வரவழக்கம். அப்பாவுக்கு சாயங்காலம் இங்கேயிருந்து இரண்டாவது கல்லில் ஒரு பிள்ளையார் கோவில். ஒருகால பூஜை.கையோடு ஒருகுடம் குடிஜலமும் எடுத்துப் போவேன். இதோ ஒரு நிமிஷம். மேலே போய் வந்துடறேன். இங்கேயே இருக்கேளா?”

“நானும் வரேன்-?”

“உங்களுக்கேன் கஷ்டம்?”

“என்ன கஷ்டம் என்னை என்ன மூட்டைகட்டி வெச்சுட்டியா? நான் ஏறாத கரடிமலையா?”

இடுப்பில் குடத்துடன் அவள் முன் ஏறுகையில், வேணுமென்றே என் நடை அவளை இரண்டு படிகள் முன் விட்டது.

இடுப்பில் குடத்திற்கு இடம், குடத்தின் செருக்கு.

இடையில் குடம், இடுப்பின் செருக்கு.

இடையின் வளைவுள் குடத்தின் வளைவு புதைந்ததும் கோடுகள் பூக்கும் மர்மப் புன்னகை இதயத்தில் ஒளி தட்டுகின்றது.

படியேறுகையில், அவள் உடலில் லேசான வளைவுகள் சுடராட்டம்போல் விளைகையில், முதுகுப்புறம், வலது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/58&oldid=1130499" இலிருந்து மீள்விக்கப்பட்டது