உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 93


ஒரு குரங்கு, தாய்க் குரங்கு, அதன் வயிற்றைக் குட்டி பற்றிய வண்ணம் அனாயாசமாய்க் கிளைக்குக் கிளை தாவுகிறது. குரங்கும் பத்திரம் குட்டியும் பத்திரம். நம்போல் விளிம்பில் தத்தளிப்பு அதற்கில்லை. அதன் பிடி குரங்குப் பிடி.

பின்னால் சலசலப்பு கேட்டுத் திரும்புகிறேன். சாவித்திரியின் புதுப் புடவையைக் கட்டிக்கொண்டு, தலைகுனிந்தபடி அபிதா நிற்கிறாள். அவள் பின்னால் அவள் தோளைப்பற்றிக் கொண்டு, இளவரசியின் தாதி போல் சாவித்ரி.

மூக்குப் பொடிக்கலர். அதையொட்டி அவள் முகம், முழங்கைக்குக் கீழ்ப்பாகம், சந்தன வெண்மை பளீரிடுகின்றன. இப்பொழுதுதான் கவனிக்கிறேன், வெட்கமும் சந்தோஷமும் குழுமிய அவள் முகம் நிமிர்கையில், அபிதாவின் கண்கள் முழுக் கருமையில்லை. கரும் பழுப்பு. கறுப்பு உடுத்தினால் அதற்கேற்றபடி விழிகள் நிறம் மாறுமோ என்னவோ? சட்டென்று அவள் என் காலில் விழுந்து நமஸ்கரித்தாள். பின்னல் பாம்புபோல் என் பாதத்தில் லேசாய்ப்பட்டது. புல்லரித்துப் போனேன்.

“வாயில் கொழுக்கட்டையா? நமஸ்காரம் பண்றாள், ஆசீர்வாதம் பண்ணுங்களேன், சுருக்க கல்யாணம் நேரட்டும்னு!”

சாவித்ரி, என் வேதனை அறிந்துதான் சொல்றையா?

இப்போது நீங்கள் இருவரும் சேர்ந்து செய்த சதி.

இவள் வெற்றியா உன் வெற்றியா?

என்னிடம் எதை நிரூபிச்சு ஆறது?

என் நெஞ்சையா, இவள் நிறத்தையா?

பாபி!

நான் மௌனமாய் எழுந்து அவ்விடம் விட்டு அகல்கிறேன். சாட்டையின் கொடுக்குப்போல் சாவித்ரியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/99&oldid=1748681" இலிருந்து மீள்விக்கப்பட்டது