பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/560

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540


தளவம் குருந்து அணைய' - என்று அவ்வாண்மரம் :குருந்த மரம் என்று அடையாளங் காட்டியுள்ளார். இக்கொடிப் இது மட்டுமன்று சிவந்த பெண் தழுவினால் வெண்ணிறப் பெண்ணும் தழுவ வேண்டாவா? இதனையும் அக்கணிமேதை யாரே, க... . . . . - முல்லை பெருந்தண் தளவொடுதம் கேளிரைப்போல் காணாய் குருந்தம் கொடுங்கழுத்தங் கொண்டு'2 -என முல்லையும் கடித்தழுவிக் களிப்பதைப் பாடினார். இவ்வகையால் தளவத் தோடு குருந்து உறவுகொண்டு விளங்குவது. இவ்வாறு தழுவி நிற்கும் மூவரையும், பிரிந்து தவிக்கும் ஒருத்தி பார்த்தால் எந்நிலை பெறுவாள்? தளர்ந்து சாம்பும் அவளைக் கண்ட அவளது தோழி, "குருந்தே கொடிமுல்லாய் கொன்றாய் தளவே” - என்று ஒலமிட்டாள். முல்லை அக்கையும் தளவத் தங்கையும் தழுவப்பெற்றதால் குருந்து அடுத்துக் காணத்தக்கதாகின்றது. 13. நான்கில் ஒரு மலர். குருந்து.

போம்அங்கே பாரும் அந்தப்புன எலுமிச்சை' என்றான்;

"ஆம்" என்றேன். அதைத்தான் ஐயா, குருந்தென்றும் அறைவார்’ என்றான்4 -பாவேந்தர் பாரதிதாசனார் தமக்கு வழி சொல்லுவான் போன்று பேசவைத்து நாட்டுப்புறத்தான் வாயில் நல்ல தமிழ் உலவுவதைக் காட்டினார். அதில் குருந்து' என்பது "புனளலுமிச்சை என்றார். இதே சொற்போக்கில் பிங்கல நிகண்டு, - - 'புனஎலுமிச்சை குருந்தெனப் புகலுவர்க - என்றது. மேலும் குருந்திற்குச் சொல்லப்படும் 'குந்தம்’ என்பது குருந்தின் 1 திணை. நூ: 98 :3. 4 அழ, சி. காடு : 4 2 திணை. நூ. 105 :2, 4. 5 பிங், தி : 2777 8 திணை.நூ. 116 : 1. . . .