உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அன்பு அலறுகிறது

 என்னுடைய ரத்தக்கண்ணீரைத் துடைக்க வந்த போது......"

"அவர் எதற்காக நீலிக்கண்ணீர் வடித்தார், நீங்கள் எதற்காக ரத்தக்கண்ணீர் வடித்தீர்கள்?"

"அதுதான் என் கதை; விசித்திரமும் வேதனையும் மிக்க கதை!" என்றாள் அவள், கண்களில் துளித்த நீருடன்.

"சொல்லுங்கள், விவரமாகச் சொல்லுங்கள். எனக்காகச் சொல்லாவிட்டாலும் உங்கள் சகோதரிகளான தமிழ்நாட்டுப் பெண்களுக்காகச் சொல்லுங்கள்?’ என்றேன் நான்.

அவள் சொன்னாள்: