பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1. அந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத காள், அந்த நாள்-என்னுடைய வாழ்க்கையில் மட்டுமென்ன, கம் எல்லோருடைய வாழ்க்கையிலுமே அந்த காள், மறக்க முடியாத நாள் தான்! அன்று காலைதான் அவருக்கு கான் இரண்டாக் தாரமாக வாழ்க்கைப்பட்டேன். அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, அக்கினியை வலம் வந்தேன். பஞ்ச பூதங்களின் சாட்சியாக, பந்துமித்திரர்களின் சாட்சியாக அவர் என்னுடைய கழுத்தில் தாலியைக் கட்டினர். அந்தத் தாலியைச் சில சீர்திருத்தவாதிகள் சொல்வதுபோல கான் துாக்குக் கயிருகவோ, அடிமை யின் சின்னமாகவோ மதிக்கவில்லை; காமுகரிடமிருந்து என்னைக் காக்கும் சாட்டையாகவும், ஆணும் பெண் னும் கலந்த அன்பின் சின்னமாகவுமே மதித்தேன். அன்றிருந்து சட்ட பூர்வமாகவும் சாஸ்திர பூர்வமாக வும் அவர் எனக்கு முதல் கணவரானர்; கான் அவருக்கு இரண்டாவது மனைவியானேன்! கல்ல வே8ளயாக முதல் மனைவி இருக்கும்போதே அவர் என்னே இரண்டாந்தாரமாகக் கொள்ளவில்லை; இல்லாத போதுதான்-அதாவது, இறந்து மறைந்த பிறகுதான் கொண்டார். t