51 வர்த்தி இன்னும் மரிக்கவில்லை. தங்கமணிகள் கட்டிய வில்வெட்டுத் திரைகளுடன், அவர் பள்ளியறையில் நீட்டி கிமிர்ந்து விறைப்பாகப் படுத்திருந்தார். அறையில் பெரிதான திறந்த சாளரம் ஒன்று இருந்தது. அங்திமயங்கிய பின், அதன் வழியாகத் தண்மதியின் ஒளி உள்ளே பரவியிருந்தது. அவர் பக்கத்தில் செயற்கைக் குயிலும் இருந்தது. சக்கரவர்த்திக்கு மூச்சு விடுவதே கஷ்டமா யிருந்தது. நெஞ் சில் ஏதோ பாரம் அமுக்குவது போலிருந்தது. அவர் கண்களைத் திறந்து, எழில் மிகுந்த தங்கப் பறவையே, பாடு உனக்கு என் தங்கப் பாதுகையைக் கூடப் பரிசளித்தேன்; நவரத்தினங்கள் பரிசளித்தேன்! பாடு, சிறிது கேரம் உன் இசையைக் கேட்க வேண் டும்! என்று வேண்டினர். ஆனல் பறவை மெளனமாக இருந்தது. அதனுள் இருந்த விசையைத் திருக்கி வைப்பார் இல்லாததால், அது அலகைத் திறக்கக் கூட முடியவில்லை. திடீரென்று பக்கத்து ஜன்னலிலிருந்து இசையமுதம் உள்ளே பாய்ந்து வந்தது. வெளியே ஒரு மரக் கிளையில் அமர்ந்துகொண்டு, உண்மையான குயில் பாட்டிசைத்தது. சக்கரவர்த்திக்கு உடல் கல மில்லை என்று கேள்விப்பட்டு அவருக்கு ஆறுதலளிப்பதற்காக அது வந்திருந்தது. அதன் இசையால் சக்கரவர்த்தியின் ாரம்புகள் முறுக் கேறின. அவற்றில் உதிரம் கன்ருகப் பரவி, அவர் உடம்புக்குத் தெம்பு உண்டாகிவிட்டது. ான்றி, நன்றி' என்று மொழிந்தார் சக்கரவர் த்தி. தெய்விகப் பறவையே, உன்னை எனக்குத் தெரியும். உன்னை நான் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டேன். இப்பொழு து நீ வந்து எனக்கு உயிர் தந்தாய் சாவை எதிர்த்து விரட்டிவிட்டாய் உனக்கு கான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? என்று அவர் வியப்போடு வினவினர். 'எனக்குத் தாங்கள் போதிய கைம்மாறு செய்துவிட்டீர்களே! முதல் முதல் கான் தங்கள் முன்பு பாடியபொழுது நீங்கள் உள்ள முருகிக் கண்ணிர் விட்டீர்களே! அதுவே எனக்குரிய வெகுமதி யாகும். பாடகருக்கு அதுதான் வேண்டும்...நான் மேலும் பாடு கிறேன். தயவு செய்து இப்பொழுது நீங்கள் கண்களை மூடிக் கொண்டு உறங்க வேண்டும்' என்றது குயில். 79ן ח
பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/51
Appearance