பக்கம்:அன்னப் பறவைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 அது மறுபடி பாடிற்று. சக்கரவர்த்தி ஆழ்ந்த துயில் கொண் டார். காலக் கதிரோன் உதிக்கும்பொழுது அவர் உடல் கலம் பெற்று எழுந்திருந்தார். அவர் உண்மைக் குயிலைப் பார்த்து, அன்புக் குயிலே! நீ என் னுடேனேயே எப்பொழுதும் இருந்துவர வேண்டும். உனக்கு விருப்ப மான சமயம் பாடினல் போதும். இந்தச் செயற்கைக் குயிலே நான் சுக்கு நூருக உடைத் தெறிகிறேன்! என்ருர். இதற்குக் குயில் கூறியதாவது: அரசர்க்கு அரசே! அப்படிச் செய்ய வேண்டாம். அதனுல் இயன்ற நன்மையை அது தங்களுக்குச் செய்துவிட்டது. அதுவும் தங்களிடமே யிருக்கட்டும். நான் இங்கே இந்த அரண்மனையில் கூடு கட்டிக் குடியிருக்க முடியாது. எனக்குப் பிரியமானபோதெல்லாம் நான் வருகிறேன். வந்து, கிளே யில் அமர்ந்துகொண்டு மாலை நேரத்தில் பாடுகிறேன். என் இசையால் தங்களை மகிழ்விக்கிறேன்; அத்துடன் தங்கள் சிந்தனையும் கிளர்ச்சி யடையச் செய்கிறேன். தங்களிடமிருந்து மறைத்து வைக்கப்பட் டிருக்கும் கல்லதையும் தீயதையும் பற்றிப் பாடுகிறேன். ஆளுல் தாங்கள் எனக்கு ஒர் உறுதி அளிக்க வேண்டும்' "எங்த உறுதியும் அளிக்கிறேன்!" என்ருர் சக்கரவர்த்தி. அப் பொழுது அவர் கண்ணைப் பறிக்கும் ஜரிகைப் பட்டு உடைகளுடன் விளங்கினர். ஒரே விஷயம்தான் நான் வேண்டுவது. தங்களிடம் எல்லா விஷயங்களையும் தெரிவிக்கும் சின்னஞ் சிறு பறவை ஒன்று இருப்ப தாக வெளியே சொல்லாமலிருக்கவேண்டும்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னப்_பறவைகள்.pdf/52&oldid=736198" இலிருந்து மீள்விக்கப்பட்டது