பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பகத்தில் 30,000 நூல்கள் உள. செபர்சன் படிப்பகத்தில் 9,000 நூல்கள் உள. வழக்கமான படிப்பகத்தில் இல்லாத நூலை எடுப்பதற்கு நூல்தட்டுக்களுக்கு மக்களை விடலாம் ; அதில் தவறில்லை.

ஆராய்ச்சிக்குரிய சிறந்த வசதிகள்

சீரிய ஆழ்ந்த அரும்பெரும் ஆராய்ச்சிக்கு வேண்டிய படிப்பகங்கள், பிற கருவிகள் காங்கிரசு நூலகத்தில் நிரம்ப உள.

சட்ட நூலகம்

நூலகத்தின் இரண்டாவது மாடியில் சட்ட நூலகப் படிப்பகம் இருக்கிறது. சட்டம் பற்றிய அரும் பெரும் விளக்கங்களும் வரலாறும் நிரம்பிய பத்து நூறாயிரம் நூல்கள் இங்கே உண்டு. அவற்றிலே பலமொழி நூல்களும் உண்டு. இந்நூலகப் பட்டியல் பொது நூலகப் பட்டியல் போன்றதன்று. இந்நூற்பட்டியல் பிவுரிநூற் பட்டியல் எனப்படும். இதிலே ஆசிரியர் பிரிவு, ஆங்கில அமெரிக்கப்பிரிவு, அய்ல்நாட்டுப்பிரிவு ஆகிய முப்பிரிவுகள் காணப்படும். இவை பொதுப் பட்டியலில் இரா. இங்கு மொத்தம் முப்பத்தையாயிரம் குறிப்பு நூல்கள் உள. இவற்றை வருவோர் தாமாகவே எடுத்துப் படிக்கலாம். இங்கே வழக்குமன்ற நிகழ்ச்சி நிரல்கள், அறிக்கைகள், பெரிதும் பயன்படும் சட்ட நூல்கள், சட்டக் கலைக் களஞ்சியங்கள் முதலியவைகள் சேர்த்துவைக்கப் பட்டிருக்கும். பொது நூலகத்திலே இல்லாத நூல்கள் கூட இதன் பட்டியலிலே இருக்கும். குறிப்பு நூல்பகுதியிலே இல்லாத நூல்கள் வேண்டுமானால் அதற்குரிய விண்ணப்பத்தை நிரப்பி அளித்தல் வேண்டும்.

தொகுக்கப்படாத சட்ட வெளியீடுகள். வெளியீட்டுத் தொகுதிகள் ஆகியவை சட்ட நூலகப் படிப்பகத்-