இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
அங்கிருந்து வெளியேறி, அரவம் அடங்கியிருந்த பல தெருக்களின் வழியாக நடந்து சென்று, ஆலயத்தை ஒட்டியிருந்த இடுகாட்டை அடைந்தாள். அங்கே தனக்கு வேண்டிய முட்செடிகளைப் பறித்துக் கொண்டு, அவள் வேகமாக அரண்மனை திரும்பினாள்.
இரவில் ஒரே ஓர் ஆசாமிதான் அவளைக் கண்டது; அவரே மதகுரு. அவள் சாதாரணப் பெண் அல்லள்; சூனியக்காரிதான் என்று அவர் நிச்சயம் செய்துகொண்டார். மந்திர வித்தையால்