பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

 வெற்றிதரக் கூடிய இலட்சியங்கள் நம் முன் நிற்கின்றன. ஆனல், அதே வரிசையில் வசீகரப் பூச்சுக்களுடன் மயக்க மூட்டத்தக்க பேச்சுக்களையும் குறிக்கோள் என்னும் பெயரால் நிற்க விடுகின்றனர் ; தெளிந்து அறிதல் வேண்டும்.

நாட்டிலே ஒற்றுமை வேண்டும். இது குறிக்கோள். அனைவரும் ஏற்கத்தக்கது. இதன் வெற்றிக்காக அரும்பணி யாற்றுவது மாணவர் கடன்.

"நாட்டின் ஒற்றுமைக்காக. உன் மொழி உன் மரபு அழிந்திடவும் ஒருப்பட வேண்டும். பிறமொழியின் ஆதிக்கத்தை ஒப்புக் கொள்ளவேண்டும்"?. இஃது அறிவுள்ள எவரும் ஏற்கமுடியாதது. தன்மானமுள்ள எவரும் எதிர்த்தாகவேண்டியது.

இதனை இலட்சியம் என்றோ திட்டம் என்றோ கூறுவது இலட்சியம் என்பதற்கே களங்கம் தேடுவதாக முடியும்.

நாட்டுப் பொதுச் செல்வம் நாளும் வளர வேண்டும். அதற்கான முறையில் அனைவரும் உழைத்திட வேண்டும். இஃது எல்லோரும் ஒப்புக்கொள்ளத்தக்க இலட்சியம்.நாட்டுப் செல்வம் பெருகட்டும். அது நாலாறு பேர் களிடம் சென்று சிக்கிக் கிடப்பினும் கவலை வேண்டாம். என்றுரைப்பது இலட்சயமாகாது. அதனைக் கேலிக் கூத்தாக் குவதாகும்.

கூடி வாழ்ந்தால் கோடி இன்பம். இனிய எளிய இலட் சியம் ; கூடி வாழ்வோம்; உன்னிடமுள்ளது எனக்கு, என் னிடமுள்ளது எனக்கு என்னும் முறை வகுத்திடல் கூடி வாழ்வதாகாது.

ஆட்டுக்குட்டியைத் தின்று விட்ட ஒநாய், "என்னோடு ஒன்றாக இணைந்துவிட்டது. நாங்கள் இணைபிரியாச் சகோ தரர் ஆகிவிட்டோம்"? என்று கூறுவது போன்ற முறையில் ஒற்றுமை வேண்டுவோர் நடந்திடக் கூடாது என்பதனை அறிவுறுத்த வேண்டும்.