41 ருடென்ஸ்: அவர்கள் அங்கே வெகு தொலைவில் இருக்கிறர் கள்! இதுபோன்ற தருணம் இனி வாய்க்காது இந்த நேரத்தில்-இந்த நிமிஷத்திலேயே-என் விதி தீர்மான மாக வேண்டும்! இனி உன் கண் முன்பு தோன்றுவதா இல்லையா என்பது முடிவாக வேண்டும் ! கருணை வழியும் உன் கண்கள் ஏன் ப்படிக் கடுமையான பார்வை என் னும் படையை ஏவ்வேண்டும் ஆல்ை நான் யார்கொம்புத் தேனுக்கு ஆசைப்பட ? வாழ்வில் இன்னும் நான் போர்கள் செய்திலேன், புகழ் மாலை சூட்டிலேன் ! தீரச் செயல்கள் புரிந்து, உனக்குச் சமமாக உன்னைச் சூழ்ந்து நிற்கும் வீரர் கூட்டத்தை நான் சேர்ந்திலேன் எனினும், உண்மையும், காதலும் நிறைந்த உள்ளத்தோடு நான் உன்னை அணுகுகிறேன். -- பெர்தா: உன்னைச் சூழ்ந்திருப்பவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளையெல்லாம் கைவிட்டு நிற்கும் நீயா உண்மை யையும் காதலையும் பற்றி உரையாடுகின்ருய் ? (ருடென்ஸ் திடுக்கிட்டுப் பின்வாங்குகிருன்.) ஆஸ்திரியாவின் அடிமை! அந்நியரின் அடிவருடி ! தன் இனத்தாரைக் கொடுமையுடன் நசுக்கும் வேற்ருருக்குத் தன்னை விற்றுவிட்ட கயவன் ! ருடென்ஸ்: எழிலரசி! நீயா என்னை இவ்வாறு பழிக்கிருய் ? உனக்காக-உன்னைத் தேடிக்கொண்டுதான் இப்பக்கம் நான் திரும்பினேன் ! பெர்தா : என்னைக் கண்டுபிடிக்க நல்ல இடம் பார்த்தாய்துரோகிகள் பக்கத்திலா என்னைத் தேடவேண்டும் ? ஜெஸ் லரின் கையை-கொடுங்கோலன் ஜெஸ்லரின் கையைபிடித்தாலும் பிடிப்பேன்-சுவிஸ் நாட்டின் சொந்த மகன யிருந்தும், அந்த அந்நியனுடைய கைக்கருவியாகச் செயல் பட ஆசை கொண்டவனை நான் தீண்டமாட்டேன்! ருடென்ஸ் : அட ஆண்டவனே! இதை என் காதால் கேட்க வேண்டுமா ? " . பெர்தா : நல்லவனுக்குத் தன் நண்பர்கள், உறவினரைவிட வேண்டியவர்கள் வேறு யார்? ஒரு பாவமும் அறியாமல் நசுங்கிக் கிடக்கும் நிரபராதிகளின் பக்கம் நின்று, அவர்
பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/48
Appearance