பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
49

தொடக்கத்தில் துளிர்விட்ட எதிர்ப்புக் கலைந்தது கேட்டுப் பெரிதும் மகிழ்கிறேன்.

நான் அங்குச் செல்வது அங்குள்ள நிலைமையினைக் கண்டிட: கெடுத்திட அல்ல;

என் பயணம், காண கேட்க - களித்திட - கருத்துப் பெற; கசப்புணர்ச்சியூட்டிட அல்ல; அஃது என் இயல்பும் அல்ல!

மலேசியப் பயணத்தை முடித்துக் கொண்டு, தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ், கம்போடியா, பர்மா எனம் நாடுகளைக் காணத் திட்டம் மேற்கொண்டுள்ளேன்.

மலேசியாவின் அரசியல் பிரச்சினைகளை - பல்வேறு நாட்டுப் பிரச்சினைகளைக் கற்றறிந்திட விழைந்திடும் மாணவன்போல் - அறிந்து கொள்ளச் செல்கின்றேன். பங்கேற்க அல்ல.

அதுபோன்றே, இங்கு நான் முழுக்க முழுக்க ஈடபட்டுள்ள அரசியல் பிரச்சினைகளை அங்குக் கடைவிரித்துக் கூறிடுவேனா, நான்? - பண்பு எனும் வரம்பறிவேன் - பணியாற்றும் முறையும் அறிவேன். இங்குள்ள அரசியலை அங்கு எடுத்து இயம்பிடுதல் பொருத்தமற்றது என்ற பொறுப்பினை உணர்ந்துள்ளேன்.

அன்பன் அண்ணாதுரை 15-7-65 நம்நாடு

ஒரு துளித் தண்ணிர் பெறும் வலிவு

அதற்குப் புத்தர் பதிலளிக்கையில், அந்த ஒரு துளித் தண்ணிர் கடலுடன் கலந்து விட்டால், கடலின் வலிவு அத்தனையும் அந்த ஒரு துளித் தண்ணிருக்குக் கிடைத்து விடும்", என்றார்.

"அதுபோல, இந்நாட்டில் வாழும் பத்து இலட்சம் தமிழ் மக்களும் இந்நாட்டுடன் இரண்டறக் கலந்து விட்டால் மலேசியா வலிவடைந்து விடும்."

-

ஜோகூர் ஸ்டேடியத்தில் அண்ணா பேச்சு