பக்கம்:அவள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286 லா, ச. ராமாமிருதம்

நான் வெளியே வந்துகொண்டிருந்தேன். நீ உள்ளே நுழைந்துகொண்டிருந்தாய். இரண்டு வாலிபர்களிடையே அவர்கள் தோள்மேல் தொங்கிக்கொண்டு என்னவோ பேசிச் சிரித்துக்கொண்டு. நீ என்னைப் பார்க்கவில்லை. எனக்கு உன்மேல் நெஞ்சு குமுறவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. என்னென்ன விதமாய் அமெரிக்காவைப் பழி வாங்க முயன்றுகொண்டிருக்கிறாய் அமலி?

காதல் பாலூட்டி வளர்த்த பாம்பு சமீபத்தில் காதல் எனும் துரோக நதி' என்று ஒரு சிறுகதையைப் படித்தேன். ரெட்ஸீ, ப்ளாக்ஸீ, டெட்ஸீ, நச்சுப்பொய்கை, தி கோல்டன் ரிவர் என்கிறார்போல் துரோக நதி, அசரீரி வாக்குப் போன்ற தலைப்பு. அப்படியும் இருக்குமோ அமலி?

நாளைக்கு, நாளைக்கு—'நாளை போகாமல் இருப்பேனோ—நான் அந்தத் தில்லை நடராஜனைக் காணாமல் இருப்பேனோ— கிட்டப்பா குரல் கணிர்!—

'கட்டுக்கழி படர்ந்த கருமுகில் காட்டுக்குள்ளே உன்னை விட்டுப் பிரிந்தேனடி கிளியே—வேதனைதான்பொறுக்குதில்லை’— மறுபடியும் கிட்டப்பா.

எலும்பெல்லாம் மெழுகாகத் தளர்கிறது. நாளை நாளை என்று 25 30 வருடங்கள் இன்னும் கூடவோ என்னவோ!

வேலையில் எட்டு முறை இடம் மாற்றலாகிவிட்டது. இது தவிர 'கேம்ப்' இடம் இடமாய் சுற்றல்—இடையே.

ஸ்ரீகண்ட் -

ஸ்ரீதர்

ஸ்ரீபால்

வெறும் ஸ்ரீயில் ஒரு பாலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/330&oldid=1497743" இலிருந்து மீள்விக்கப்பட்டது