பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அருணகிரிநாதர் (684-685) என்னும் தலத்தை அடைந்தனர். அங்கு செல் வேளைப் பணிந்து நக்கீரருக்கு அருளிய பெருமாளே ! வேத புரிசர்தரு சேயே பொன்னுலகத்தாரின் பெரு வாழ்வே உமையாள் தரு குமரேசா ! 'மாப்பாதகனும் அடியேனை நின் அருளாலே பார்ப்பாய2லயோ அடியாரோடு சேர்ப்பாயலையோ ! உனதாரருள் கூர்ப்பாயலையோ'-என உள்ளம் நெக்குருகிப் பாடிப் பரவினர் (685). திருவேற். காட்டை (107) வெஞ்சமாக் கூடற் பதிகத்தில் (935) வேற். கானம் -எனக் குறிப்பிட்டுள்ளார். திருவேற் காட்டினின்றும் புறப்பட்டுப் (179) பாக்கம் (682.683) வந்து தரிசித்துப், (180) பழையனூர் திருவாலங் காட்டைச் (677-680) சேர்ந்தார். அங்குச் சிவபிரான் காளியோ டாடிய லீலையைக் காளியோ டாடிய நடேசுரர். அண்டரும் உ(ய்)ய நின்று ஆடுங் கூத்தன், சிவமய ஞானங் கேட்க, தவமுநிவோரும் பார்க்க, திருநடமாடுங் கூத்தர் ” ' முதிர்நடமாடுங் கூத்தர்' எனப் பலவாறு பாராட்டிப் புகழ்ந்து பழையனூரையும் சிறப்பித்தார் (679); முருகரைத் தினமா இன்பா' என்ருர் (677); 678-ஆம் பாட்டில் வரும் 1 அஞ்சா நெஞ்சாக்கந் தரவல பெருமாளே ” என்னும் அடி மனப் பாடஞ் செய்யத் தக்கது. திருவாலங்காட்டைத் தரிசித்தப் பின்பு (181) முள்வாய் (993) என்னுந் தலத்தை அடைந்து மாதர் வந்திறைஞ்சு முள்வாய் என விளக்கி, அங்கிருந்து போந்து ஆற்காட்டுக்குச் சமீபத்திலுள்ள (182) வேப்பூர் (757-758) என்னுந் தலத்தைத் தரிசித்து வேல்வாங்கு வகுப்பின் கருத்தமைந்த பாடலைப் (757) பாடி, வள்ளியைத் தேடிவந்த உன் திருவடித் தாமரையை யான் பாடுதற்கு வண் தமிழ் தா " என வேண்டினர் : வேப்பூர் என்பதற்கு நிம்பபுரம் என்னும் மறு பெயரிட்டுப் பாடல் (758) அஞ்சுவித என்பதைப் பாடினர். (நிம்பம்= 1. மங்காதிங் என்னும் பாடல் 1183 ஈற்றடியும் பார்க்க.