பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. அண்டார்க்டிக் கண்டத்தில் ஓர் ஆராய்ச்சியாளர்

பள்ளிச் சாரணர்

1928 ஆம் ஆண்டு பால் சைப்பிள் அமெரிக்கப் பள்ளிச் சாரணராக இருந்தார். அப்பொழுது அவருக்கு வயது 9. இருப்பினும் அஞ்சா நெஞ்சத்துடன் அவர் பள்ளிச் சாரணர் சார்பில் பயர்டு என்பார் குழுவினருடன் தென் முனைக்குச்சென்று திரும்பினார். பயர்டு தென் முனைக்குச் சென்ற ஆண்டு 1928 ஆகும்.

இந் நிகழ்ச்சிக்குப் பின் உலகிலுள்ள இளைஞர்கள் எல்லாம் சைப்பிளைப் போற்றத் தொடங்கினார்கள். ஏன் பொருமை கூடப் பட்டார்கள். ஆனல், இந்நிகழ்ச்சி சைப்பிளேப் பெரிய ஆராய்ச்சி யாளராக மாற்றிற்று.

பெரிய விஞ்ஞானி

அண்டார்க்டிக் பயணம் பள்ளிச் சாரணராக இருந்த சைப்பிளை ஒரு பெரிய விஞ்ஞானியாக மாற்றிற்று. இவர் தென்முனை ஆராய்ச்சியில் சிறந்த வல்லுநர்.

அண்டார்க்டிக் பயணம்

டாக்டர் சைப்பிள் அண்டார்க்டிக்கிற்கு ஐந்து தடவைகள் சென்றிருக்கீறார். அங்கு அவர் நான்கு மாரிக்காலங்களைக் கழித்திருக்கிறார்.