பக்கம்:அவள்.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல் 507

எல்லாரும் நமஸ்கரிக்கிறோம். பாட்டி மேல் கல்லைப் போல் மெளனம் இறங்கிப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. வாதத்தில் கைகால் முடங்கி நாக்கும் இழுத்து விட்டபின் கண்கள் தாம் பேசுகின்றன. கண்களில் பஞ்சு பூத்து விட்டாலும், குகையிலிட்ட விளக்குகள் போல், குழிகளில் எரிகின்றன. நான் தலை குனிகையிலே எனக்குத் தோன்றுகிறது: இவர் இவரா, இதுவா? கோவிலில் நாம் வணங்கிடும் சின்னத்திற்கும், இவருக்கும் எந்த முறையில் வித்தியாசம்? கோவிலில்தான் என்ன இருக்கிறது?

-"ஐயோ ஐயோ-' என ரேழி அறையிலிருந்து ஒரு கூக்குரல் கிளம்புகிறது. என்னவோ ஏதோ எனப் பதறிப் போய், எதிரோலமிட்டபடி எல்லோரும் குலுங்கக் குலுங்க ஒடுகிறோம். வீல்" என அழுதபடி குழந்தை அவன் பாட்டி மேல் வந்து விழுகிறான். 'என்னடா கண்ணே!' அம்மா அப்படியே வாரி அணைத்துக் கொண்டார். சேகர் எப்பவும் செல்லப் பேரன். இரண்டாமவரின் செல்வமில்லையா?

'பாட்டி! பாட்டி!' பையன் ரோஸத்தில் இன்னமும் விக்கி விக்கி அழுகின்றான். 'அம்மா, அடி அடின்னு அடிச் சூட்டா-' -

"அடிப் பாவீ! நாளும் கிழமையுமாய் என்ன பண்ணீட்டாடா உன்னை: அம்மாவுக்கு உண்மையிலே வயிறு எரிந்து போய்விட்டது, கன்னத்தில் அஞ்சு விரலும் பதிஞ்சிருந்ததைப் பார்த்ததும்.

"காந்தீ! ஏண்டி காந்தீ!!"

ரேழியறை ஜன்னலில், காந்திமதி மன்னி உட்காந்திருந்தாள். ஒரு காலைத் தொங்கவிட்டு ஒரு காலைக் குந்திட்டு, அந்த முட்டிமேல் கைகளைக் கோத்துக் கொண்டு, கூந்தல் அவிழ்ந்து தோளில் புரள்வதுகூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/551&oldid=1497345" இலிருந்து மீள்விக்கப்பட்டது