பக்கம்:அவள்.pdf/552

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


508 லா. ச. ராமாமிருதம் அவளுக்குத் தெரியவில்லை. அவள் கண்களில் கோபக் கனல் வீசிற்று. உள்வலியில் புருவங்கள் நெரிந்து, கீழ் உதடு பிதுங்கிற்று. அம்மாவைக் கண்டதும் அவள் எழுந்திருக்கக்கூட இல்லை. "ஐயையோ!' என் பக்கத்தில் சின்ன மன்னி நின்று கொண்டிருந்தாள். முழங்கையையிடித்துக் காதண்டை, 'காந்தி மன்னிக்கு வெறி வந்திருக்கு’ என்றாள். காந்தி மன்னிக்கு இப்படி நினைத்துக் கொண்டு, இம் மாதிரி முன்னறிக்கையில்லாது குணக்கேடு வந்துவிடும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ, ஆறு மாதங்களுக்கு ஒரு முறையோ மூன்று நாட்களுக்குக் கதவையடைத்துக் கொண்டு விடுவாள். அன்ன ஆகாரம், குளி ஒன்றும் கிடையாது. சந்திரனை ராகு பிடிப்பதுபோல் பெரிய மனச்சோர்வு அவளைக் கவ்விடும். அப்போது அம்மா உள்பட யாரும் அவள் வழிக்குப் போக மாட்டார்கள். காந்தி மன்னியின் வாழ்வே தீராத் துக்கமாகி விட்டது. சின்ன மன்னி அப்புறம் என்னிடம் விவரமாய்ச் சொன்னாள். என்னால் நிஜமாகவே கேட்கவே முடிய வில்லை. காதையும் பொத்திக்கொண்டு கண்ணையும் இறுக முடிக்கொண்டு விட்டேன். அந்தக் காகஷியை நினைத்துப் பார்க்க முடியவில்லை. உங்கள் இரண்டாவது அண்ணா, தீபாவளிக்குச் சீனி வெடி வாங்கப்போய்ப் பட்டாசுக் கடையில் வெடி விபத்தில் மாட்டிக்கொண்டு விட்டா ராமே! எந்த மஹாபாவி சிகரெட்டை அனைக் காமல் தூக்கி எறிந்தானோ, அல்லது வேறு என்ன நேர்ந்ததோ? வெடித்த வெடியில் கடை சாமான்கள் பனைமர உயரம் எழும்பி விழுந்தனவாமே! அண்ணாவுக்குப் பிராணன் அங்கேயே போய்விட்டதாம். அண்ணாவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/552&oldid=741936" இருந்து மீள்விக்கப்பட்டது