பக்கம்:அவள்.pdf/553

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பாற்கடல் 509 முகமே இல்லையாம். சில்லுசில்லாய்ப் பேந்துவிட்டதாம். முகமிருந்த விடத்தில் துணியைக் போட்டு மூடிக்கொண்டு வந்தார்களாம். சேகர் அப்போ வயிற்றிலே மூணு மாசமாம். இப்போ சேகருக்கு வயது ஏழா எட்டா? நிஜம்மா கேக்கறேன்; இந்தக் கஷ்டத்தை நீங்கள் எல்லோரும் எப்படி ஸ்ஹிச்சிண்டிருந்தீர்கள்? அம்மாவும் அப்பாவும் எப்படி இதிலிருந்து மீண்டார்கள்? நீங்கள் எல்லாரும் முதலில் எப்படி உயிரோடிருக்கிறீர்கள்? காந்திமதி மன்னி கருகிப் போனதற்குக் கேட்பானேன்? இது நேர்வதற்கு முன்னால், அவள்தாள் ரொம்பவும் கலகலப்பாய், எப்பவும் சிரிச்ச முகமாயிருப்பாளாமே! இப்போக்கூட, அந்த முகத்தின் அழகு முற்றி லும் அழியவில்லை. அவள் சீற்றம் எல்லாம் அவள் மேலேயே சாய்கையில், நெருப்பில் பொன் உருகி நெளிவது போல, தன் வேதனையின் தூய்மையில்தான் ஜ்வலிக்கிறாள். அவளுக்கு அவள் கதி நேர்ந்தபின், மற்றவர் போல் தெறித்துக்கொண்டு பிறந்தகம் போகாமல், எங்களோடு ஒருவராய், இதுவரை இங்கேயே அவள் தங்கியிருப்ப திலும் ஒரு அழகு பொலிகின்றது. அவளை அவள் கோலத்தில் கண்டதும் அம்மாவுக்குக் கூடச் சற்றுக் குரல் தணிந்தது. 'ஏண்டி காந்தி, இன்னுமா குளிக்கல்லே? வா வா, எழுந்திரு- குழந்தையை இப்படி உடம்பு வீங்க அடிச்சிருக்கையே, இது நியாயமா?” 'நியாயமாம் நியாயம்! உலகத்தில் நியாயம் எங்கே யிருக்கு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/553&oldid=741937" இருந்து மீள்விக்கப்பட்டது