பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

go 809 இதன் இலை கவட்டு இலை. அஃதாவது பிளவுபட்ட இலை. இலையின் மேற்புறம் பசுமையாகவும் அடிப்புறம் புல்லென் றும் இருக்கும். இதனால் இது, 'புன்புறக் கவட்டிலை' எனப்பட்டது. இக்கவட்டிலைக் கொத்தின்மேல் இதன் பூ தோன்றும். மேல் எல்லையாக 15பசும் மொக்குகளிலிருந்து ஓரங்குல அளவில் நீளும் மயிரிழைகள் அழகாகக் காட்சியளிக்கும். ஒரு கொத்தின் முழு மலர்ச்சி வெண்சாமரை வடிவில் சிறியதாகத் தோன்றும். பொன்னும் வாகையும் இலக்கியங்கள் இப்பூவின் நிறத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. செங்கழுநீர் வெண்கோடல் நீல்நிற நெய்தல்: கருநீலம்’ என்றெல்லாம் நிறத்தைக் குறிக்கும் அடைமொழிகளால் மலர்களின் நிறம் தெளிவாக்கப்படுவதுண்டு. இவ்வாறு வாகைப் பூவிற்கு நிறச்சொல் ஒன்றும் அண்டமொழியாகச் சொல்லப்பட வில்லை. - 'வாகை ஒண் பூ’ “சுடர் வி வாகை’’- என ஒண்மை, சுடர் என்னும் அடைமொழிகளால் குறிக்கப்பட்டுள்ளது. ஒண் மை'ஒளியுடையது என்னும் பொருள் தரும், "சுடர்' என்பதும் ஒளியைத்தான் குறிக்கும்; நிறத்தைக் குறிக்காது என்பதை வஞ்சிப்பூவின் விளக்கத் தில் கண்டோம். இடத்திற்கு ஏற்ப விளக்கின் சுடரைக் குறிக்கும். எனவே, இவ்விரு அடைமொழிகளும் வாகைப் பூவின் நிறத்தைக் காட்டுவன ஆகா. நிறச்சொல் அடைமொழி இல்லாமல் பிற அடைமொழி களாலும், உவமத் தொடர்களாலும் மலரின் நிற்ம் வெளிப்படுத்தப் படும். வால் வீ என்பதில் வால் வெண்மைப் பொருளாகி நிறத்தைக் குறிக்கும். "குருதிக் காந்தள் என்பது குருதி போன்று சிவந்த நிறக் காந்தள் என்று நிறத்தைக் காட்டும். மன்: குரல் நொச்சி என்பது நீல மணி போன்ற நாச்சிப் பூ” என நீல நிறத்தைக் காட்டும். 1 அகம் : 186 : 1.0