28
நூல் நிலையம்
28 நூல் நிலையம்
எனவே நூலகங்களில் ஏராளமான நூற்கள் இடம் பெற் றன. கி. பி. 1930ல் தரப்பட்டிருக்கும் புள்ளி விவரத்தின் படி, 160 பொதுநூலகங்கள் ஜெர்மனியில் விளங்கலாயின. இந் நூலகங்களிலிருந்த நூற்களின் மொத்த எண்ணிக்கை
மூன்று கோடியாகும். -
டச்சு நூலகங்கள்:
ஹாலந்து காட்டு லெயிடன் பல்கலைக்கழக நூலகமே இக்காட்டுப் புராதன நூலகமாகும். கி. பி. 1573ல் இந் நூலகம் தொடங்கப்பட்டது. இதன் பின்னர், அடுத் தடுத்து உட்ரெச்ட், குரோனிங்கென், ஆம்ச்டர்டாம் பல்கலைக் கழக நூலகங்கள் தோன்றின. இந் நாட்டு தேசீய நூலகம், காக் (Hague) என்னுமிடத்திலுள்ள 'ராயல் நூலகமாகும். இந்நூலகத்தில் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட நூற்களைச் சேகரித்து வைத்தனர். இங்கிருக் கும், 'அமைதிஅளிக்கும் அரண்மனை' என்று அனைவராலும் வழங்கப்பெறும் 'அகில உலக ஆய்வுக் கூடத்தில் அறுபதி யிைரத்திற்கு மேற்பட்ட நூற்கள் சேகரித்து வைக்கப் பட்டன. நாளடைவில் 500க்கு மேற்பட்ட நூலகங்கள் இக்காட்டில் திறக்கப்பட்டன. இதற்குக் காரணம், மக்க ளுக்கு வேண்டப்படும் இன்றியமையாத பொருட்களில் நூலகமும் ஒன்று’ என்று நாட்டு மக்களிடையே பரவி யிருக்கும் எண்ணமே. படக்காட்சியும், கேளிக்கை மன்றங் களும், அங்காட்டு மக்களுக்கு எவ்வளவு தூரம் தேவைப் படுகின்றனவோ, அதுபோல் நூலகமும் தேவைப்படு கின்றது. பிற நாடுகளைப்போல், இந் நாட்டிலும் ஊர்தி களில் நூற்கள் நாடெங்கும் அனுப்பப் பெறுகின்றன.
இக் காட்டில் விளங்கும் நூலகச் சங்கங்களில், டச்சு காட்டு நூலகத்தார் நூலகச் சங்கமும்', 'மத்திய பொது நூலகங்கள் சங்கமும் நூலக வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபடுகின்றன.