பக்கம்:நூல் நிலையம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 27

பெர்லின் நகரில் தொடங்கப்பட்ட மத்திய நூலகம்

தொண்ணுாறு கிளைகளுடன் விளங்கின; எட்டு லட்சத் திற்கு மேற்பட்ட நாற்கள் இந் நூலகங்களிலிருந்தன. 32க்கு மேற்பட்ட கல்லூரி-பள்ளி நூலகங்கள் விளங்க லாயின. இந் நூலகங்களில் 65 லட்சத்திற்கு மேற்பட்ட நூற்கள் இருந்தன. இவைகள் தவிர, விஞ்ஞான ஆராய்ச் சிக்கூட நூலகங்களும், கிறித்தவக் கோயில் நூலகங்களும் வேறு சில சிறப்பு நூலகங்களும், நகர் மன்ற நூலகங் களும், ஜெர்மனியில் சிறந்து விளங்கலாயின. விரும்பிய algorgoorth Litq-â65th Qpod.jp (open shelf system) Gravour நூலகங்களிலும் நடைமுறையிலிருந்தன. ப்ரூசியன் மாநில நூலகம் மிகப் பெரியதொரு நூலகமாகும். இந் நூலகத் தில் 30 லட்ச நாற்களுக்குமேல் இருந்தன. ஒவ்வொரு ஆண்டிலும் 60,000 நூற்கள் சேர்க்கப்பட்டன என்று கூறப்படுகின்றது. இந் நூலகத்தில் 60 ஆயிரம் கையெழுத் துச் சுவடிகளும் சேகரித்து வைக்கப்பட்டன. இந்நூலகத் தில் 72 அதிகாரிகளும் 330 எழுத்தாளர்களும் பணி புரிய லாயினர்.

பவாரியன் மாநில நூலகத்தில் 17 லட்ச நாற்களும், 50,000 கையெழுத்துச் சுவடிகளும்சேகரித்து வைக்கப்

பட்டன.

கி. பி. 1900ல், ஜெர்மன் காட்டு நூலகச் சங்கமானது தொடங்கப்பட்டது. ஆாலகத்தார்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு கி. பி. 1909லிருந்து அரசினரால் கற்சான்றி தழ்கள் கொடுக்கப்பட்டன. பெர்லின் நகர் நூலகத்துட னும், லிப்சிக் நகரிலுள்ள ஜெர்மன் மத்திய போர்டாருட லும், பான் என்னும் இடத்திலுள்ள பரோமோஸ் சங்கத் தாருடனும், மூன்று நூலகப் பள்ளிகள் இணேக்கப் பட்டன. அச்சுத் தொழிலில் ஜெர்மனி தலைசிறந்து விளங் கியதால் ஏராளமான நூற்கள் வெளியிடப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/36&oldid=589816" இலிருந்து மீள்விக்கப்பட்டது