பக்கம்:நூல் நிலையம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அால் நிலையம்

டேனிசு நூலகங்கள் :

முதல் டேனிசு நூலகம், கி. பி. 1432ல் தொடங்கப் பட்ட டேனிசு பல்கலைக்கழக நூலகமாகும். கி. பி. 1661ல், கோபன்கேகனில் ஒரு அரசாங்க நூலகம் தொடங்கப்பட் டது. பொது நூலகங்களின் தொடக்கம் கி. பி. 1849ல் தான் என்று கூறவேண்டும். 1887-ஆம் ஆண்டிலிருந்து அரசியலார், ஒவ்வொரு கிராமத்திலும், மாவட்டத்திலும் பொது நூலகங்களைத் தொடங்கினர். 800 நூலகங் களுக்கு அரசியலார் கன்கொடை அளித்தனர். நூலகத் துறையிலுள்ளார்க்குப் பயிற்சி அளித்தற்காகப், பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. டேனிசு நூலகச் சங்கம் ஒன்று தொடங்கப்பட்டது. இச்சங்கம் இரண்டு நூலகச் செய்தி இதழ்களே வெளியிடலாயிற்று.

பிரெஞ்சு நூலகங்கள் :

இக்காட்டில் முதன் முதலில் பொது மக்களுக்கெனப் பல நூலகங்களைத் தொடங்கிய பெருமை நகராட்சிக் குழு வினரைத்தான் சாரும் 42 நூலகங்கள் திறக்கப்பட்டன. தலைநகராகிய பாரிசில் 83 நூலகங்கள் பணி புரியலாயின. இந்நகரிலுள்ள 'பிப்ளியோதெக் நேசனேல்" நூலகம், உல கிலுள்ள பெரு நூலகங்களிலொன்ருய்க் கருதப்படு கின்றது.

ஜெர்மன் நூலகங்கள் :

முதன் முதலில், சிறப்பாகவும், சீரிய ஒழுங்கிலும், பொது நூலகங்கள் பணிபுரியத் தொடங்கியது ஜெர்மனி யில்தான். 1839ல், ஜெர்மனிய மக்களால் அவர்களது முதல் ககர நூலகம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் பல நகர் நூலகங்கள் திறக்கப்பட்டன. கி. பி. 1898ல் மாவட்டங் களிலெல்லாம் நூலகங்கள் திறக்கப்பட்டன. ஊர்திகளில் ஊர்கள் தோறும் நூற்கள் அனுப்பப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/35&oldid=589815" இலிருந்து மீள்விக்கப்பட்டது