பக்கம்:நூல் நிலையம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 25。

உறுப்பினர்களில் 600-க்கு மேற்பட்டவர்கள் பொருளுதவி யும் செய்துள்ளனர்.

அமெரிக்க நூலகச் சங்கத்தாரால் 2000-க்கு மேற். பட்ட நூலக வெளியீடுகள் வெளியிடப்படுகின்றன. இவர்களால் வெளியிடப்படும் புத்தகப் பட்டியலும், கட்டுரை-செய்தித் தொகுதிகளும் (Bulletin) நூலகத்தார் யாவர்க்கும் வேதமாகும். ஒரு வாரத்திற்கு ஒரு முறை வெளியாகும் நாற்பட்டியலின் துணைகொண்டு, புதிய வெளி யீடுகளை உடனுக்குடன் நூலகத்தார் அறிந்துகொள்ள லாம். 'நல்ல நூற்கள் குறைந்தசெலவில் பெரும்பான்மை யான மக்களுக்குக் கிடைக்க வேண்டும்” என்ற கல்லதொரு கொள்கைக்காக இச்சங்கம் உழைக்கின்றது. அமெரிக்க நாட்டிலுள்ள மாநில நூலகச் சங்கங்களும், தனிப்பட்ட நூலகச் சங்கங்களில் பலவும், இந்நூலகச் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்நூலகச் சங்கங்கள் தவிர, அமெரிக்க வர்த்தகர்கள் நூலகச் சங்கங்கள், பள்ளி நூலகச் சங்கங்கள், கத்தோ லிக் நூலகச் சங்கம் முதலிய சங்கங்கள் அமெரிக்காவில் செயலாற்றுகின்றன.

ஐரோப்பிய நாடுகளில் நூலக இயக்கம்

பெல்சியம்

கி. பி. 1920ல் தரப்பட்டிருக்கும் புள்ளி விவரத்தின் படி பெல்சியத்தில் 1200 பொது நூலகங்கள் விளங்க லாயின. ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் 2100 நூலகங்கள் விளங்கலாயின. இந் நூலகங்களிலிருந்த நூற்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/34&oldid=589814" இலிருந்து மீள்விக்கப்பட்டது