பக்கம்:நூல் நிலையம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நூல் நிலையம்

நூற்களைப் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று மக் களைப் பயன்பெறச் செய்தனர்.

நாட்டின் நலனே தங்கள் கலன் எனக் கொண்டிருந்த இராணுவத்தினருக்காகத் தொடங்கப்பட்ட நூலகங் களுக்கு நாட்டு மக்கள் பெரிதும் உதவினர். போர்ட்டிக்சு (Fort Dix) என்னும் இடத்தில் தொடங்கப்பட்ட இத் தகைய நூலகத்திற்கு 20,000 புத்தகங்களை மக்கள் கன் கொடையாகவே கொடுத்துதவினர். சமுதாய நூலகத் திட்டத்தின் கீழ் பணியாற்றிய மக்கள் இந்நூலகங்களுக் கும் சென்று உதவி புரிந்தனர். இராணுவ மருத்துவக் கூடங்களுக்கும், விமானப் படையினர் இருந்த பகுதிக்கும். ஊர்திகளில் புத்தகங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

soțGıdf#35 Hirsd5 3. Från Bio: (American Library Association)

அமெரிக்க நாடு நூலகத் துறையில், சிறந்ததொரு வளர்ச்சி பெறுதற்கு, அமெரிக்க நூலகச் சங்கமானது அரும்பாடுபட்டது. கி. பி. 1941-ல் இச்சங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 16,000 ஆகும். வெளி நாடுகளிலிருந்து பலர் இச்சங்க உறுப்பினர்க ளாயினர். நகரங்கள் தோறும் நூலகக் குழுக்களே ஏற்படுத்தியும், இத்துறையில் சிறந்த முறையில் பணி யாற்ற பல நூலகச் சிற்பிகளைத் தந்தும், கூட்டங்கள் கூட்டியும், மாநாடுகள் நடத்தியும், பலருக்கு நூலகப் பயிற்சி அளித்தும், நூலகத் துறையில் ஆராய்ச்சி செய் வோர்க்குப் பொருளுதவி செய்தும், நாடு முழுவதும் மக்கள் அறியச் செய்தும், மாநிலங்கள் தோறும் நூலகச் சட்டத் தினைக் கொண்டுவரச் செய்தும், நூற்களைத் தேர்ந்தெடுத்து நூற்பட்டியல் வெளியிட்டும், புத்தக விமர்சனம் எழுதியும். நூலகக் கட்டுரைகளையும், அவ்வப்பொழுது துண்டுப் பிர சுரங்களையும் வெளியிட்டும், இன்ன பிற இவ் அமெரிக்க நூலகச் சங்கத்தாரால் செய்யப்படுகின்றன. இச்சங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/33&oldid=589813" இலிருந்து மீள்விக்கப்பட்டது