12
நூல் நிலையம்
H2 நூல் நிலையம்
லாந்து, ஸ்காட்லாந்து இவ்விரண்டிடங்களிலும் கூட இச் சட்டம் நடைமுறைக்கு வந்தது
தொடக்கத்தில் நூலக வளர்ச்சி ஆமை வேகத்தில் தான் இருந்தது. முதல் பத்தாண்டுகளில் இருபத்து நான்கு இடங்களில்தான் இச் சட்டம் அமுலிலிருந்தது. நார்விச் ககரில்தான் முதன் முதலில் இச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனல் முதன் முதலில் நூலகங் களைத் தொடங்கிய பீடும் பெருமையும் வின்ச்ெஸ்டர், மான் செஸ்டர் நகரங்களேத்தான் சாரும். மான்செஸ்டர் நூல கத் தலைவராய் எட்வர்ட் எட்வர்ட்சு நியமிக்கப்பட்டார். இந் நூலகத்தில்தான் பிரிட்டிசு நூலக கலப் பணிகள் உருவாதற்கான வழி முறைகள் வகுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நார்விச், சால்போர்டு, பிரிக்டன், பால்டன், இப்சுவிச், ஆக்சுபோர்டு, லிவர்பூல், பிளாக்பர்ன், கேம் பிரிட்ஜ், செப்பீல்டு, கெர்ட் போர்டு, கிட்டர்மினிசுடர், லிச் பீல்டு, மெயிட்சுடோன், பிர்கென்கெட், லியாமிங்டன் ச்பா, வெஸ்ட் மினிஸ்டர், ஏர்ட்ரய், கான்டர்பரி, சுண்டர் லண்டு, வால்சால், என்ற இருபத்திரண்டு இடங்களில் பொது நூலகங்கள் திறக்கப்பட்டன. காலமும் அறிவும் வளர்ந்து வருதல் போல நூலகத்தின் எண்ணிக்கையும் வளருவதாயிற்று. பத்தொன்பதாவது நூற்ருண்டின் இறுதியில் தொண்ணுாற்றிரண்டு நூலகங்கள் விளங்க லாயின.
1897-ஆம் ஆண்டில் நூலகச் சங்கம் (Library Association) ஒன்று தொடங்கப்பட்டது. பொது நூலகத் தலைவர்களும், பிறநூலக அலுவலர்களும், நூலக வளர்ச்சி யில் ஆர்வமும் அக்கறையும் காட்டியவர்களும், இச் சங்க உறுப்பினர்களாயினர். இச்சங்க உறுப்பினர்களில் செப் பீல்டு நகரப் பொது நூலகத்தில் பணியாற்றிய தாமசுகிரீன் (Thomas Green) குறிப்பிடத் தக்கவராவர். மேடைகள்