பக்கம்:நூல் நிலையம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுநூலக வளர்ச்சி 13

தோறும் பேசியும், ஏடுகள் தோறும் எழுதியும், இல்லங் தோறும் மக்கள் உள்ளங்தோறும் நூலகங்களின் சிறப்பி னேப் பதிய வைத்தவர் இவரே. இலவசப் பொது நூலகங் கள் என்ற 463 பக்கங்கள் கொண்ட, நூலகத் துறை நூல்களுள் தலே சிறந்த நூலாகக் கருதப்படும் நூலொன்றை எழுதி வெளியிட்டார். நூலகங்களைப் பற்றிய செய்திகளையும் அவை புரியும் சேவைகளையும் விளக்கிப் புதிய முறையில் வெளியிடப்பட்ட இந்நூல் பல் வேறு தலைப்புக்களில் பல பதிப்புக்களாக உலகெங்கும் பரவின. கி. பி. 1910 லிருந்து 1937-ஆம் ஆண்டு வரை இப்புத்தகத்தின் பல பதிப்புக்களே வெளியிட்டவர் பிலிப்சு என்பவராவர். 1948 ல் இறுதியாக வெளிவந்த பதிப்பின் பதிப்பாசிரியர் ஜேம்சு கிளார்க்காவர். எண்ணிறந்த மக்க ளுக்கு நூலகத்தைப் பற்றிய அரிய செய்திகளே விளக்கி ஆயிரம் ஆயிரம் மக்களை அந்த அறப்புணியில் ஈடுபடுத்திய அருமையும் பெருமையும் அந்நூலுக்கு உரியன. நூலகத் துறையைப் பற்றிய புள்ளி விவரங்களேயும் செயல் முறை களேயும் விளக்கமாக இந்நூல் எடுத்துரைக்கின்றது. மேலும் இத் துறையில் ஈடுபடுவோர்க்குரிய தொழில் துணுக்கங்களையும் தெளிவுபட இந்நூல் தெரிவிக்கின்றது. 1890ஆம் ஆண்டில் வெளிவந்த மூன்ருவது பதிப்பில், நூலாசிரியர் 'நான்கு ஆண்டுகட்கு முன்னர் 133 இடங் களில்தான் நூலகச் சட்டம் கிறைவேறி யிருந்தது; இன்று 208 இடங்களில் இந்நூலகச்சட்டம் அமுலிலிருக்கின்றது,' என்று எழுதி உள்ளார். இத்தகைய வளர்ச்சிக்கும் அறிவு மலர்ச்சிக்கும் காரணமாக இருந்தவர் அவரே. அத்தகைய பெரியாருக்கு நூலக உலகம் என்றென்றும் நன்றி பாராட் டும் கடப்பாடுடையது. வளர்ந்து வரும் நூலகத்துறையில் 1892-ஆம் ஆண்டில் மற்ருெரு மறு மலர்ச்சி ஏற்பட்டது. இந்த மறுமலர்ச்சிக்கு ஜேம்சு டப் பிரவுன் என்பார் தங்தையாவர். இவரால் எழுதப்பட்ட நூலகத் துறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/22&oldid=589802" இலிருந்து மீள்விக்கப்பட்டது