பக்கம்:நூல் நிலையம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ł4 நூல் நிலையம்

பற்றிய அளவிறந்த, அநாமதேயக் கட்டுரைகள் மக்க ளிடையே அறிவாற்றலையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்

|படுத்தின. நூலகத்திற்கு வரும் மக்கள் பிறர் உதவியின்றி, உளம் விரும்பிய நூல்களோடு உறவாட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தால் 'விரும்பினபடிக்கும் நூலக முறை யினே (open access system) உருவாக்கியவர் இவரே. கிளார்க்கென்வெல் (பின் சுபரி) நூலகத்தில் முதன்முதலில் இம் முறையினை நடைமுறைக்குக் கொண்டுவந்து வெற்றி பெற்றவரும் இவரே. இம்முறையினுல் நூலகத்திற்கு வரும்மக்கள் எவர் உதவியுமின்றித் தாங்கள் விரும்புகின்ற நூல்களை எளிதாக எடுத்துக்கொள்ளலாம். இன்று இம் முறைதான் உலகில் பெரும்பான்மையான நூலகங்களில் நடைமுறையில் உள்ளது.

கி. பி. 20-வது நூற்ருண்டில்:

எல்லாத் துறைகளிலும் எழில் மிக்க முன்னேற்றமும் மாற்றமும் ஏற்பட்ட இருபதாம் நூற்ருண்டின் தொடக் கத்திலிருந்தே நூலக இயக்கம் சிறந்து விளங்குவதாயிற்று. சுருங்கக் கூறின் நூலகப் பாதையில் இருபதாம் நூற்ருண் டினைப் பொற்காலம் என்று குறிப்பிடலாம். நானுறு நகரங்களில் பொதுநூலகங்கள் பொலிவுடனும் புகழுட னும் விளங்கலாயின. லண்டன், கார்ன்வால் இவ்விரண்டு பகுதிகளிலும் பல பொது நூலகங்கள் சிறந்து வளர லாயின. நாளிதழ் ஒன்றின் அதிபரான பாசுமோர் எட் வர்ட்டு என்பார், நூலகத் துறையினருக்கு இலவசமாக வழங்கிய கவினுறு கட்டிடங்களில்தான் அந்த நூல் கிலே யங்கள் திறக்கப்பட்டன. இங்கிலாந்து நாட்டு நூலக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய பெரியார் ஆண்ட்ரூ கார்கிே (Andrew Carnegie) என்பவராவர். இவர் கொடுத் துதவிய 2 மில்லியன் பவுன்களைக் கொண்டு, கிரேட் பிரிட் டனிலும் (Great Britton) அயர்லாந்திலும் கி. பி. 1897

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூல்_நிலையம்.pdf/23&oldid=589803" இலிருந்து மீள்விக்கப்பட்டது