பக்கம்:பூர்ண சந்திரோதயம்-3.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பூர்ணசந்திரோதயம்-3 விலக்க இயலாத பிரேமையும் கொண்டிருந்தவள் ஆதலால், இடையில் அவளது மனம் சிறிதளவு முறிந்துபோனதானாலும் எப்படியும் அவள் தம்மிடத்தில் வைத்துள்ள பட்சத்தையும் வாஞ்சையையும் மறக்கமாட்டாள் என்றும், எப்படியும் அவள் பழைய மனிஷியாக மாறி வழிக்கு வருவாள் என்றும் அவர் நினைத்துக் கொண்டு வந்ததற்கு இணங்க, அவளும் மாறுபட்டிருந்தது அவருக்கு ஒரு பெருத்த ஜெயம் போலத் தோன்றியது. முதல் நாளிரவில் அவளைத் தனியான இடத்தில் சிறை வைத்தது நிரம்பவும் அனுகூலமாக முடிந்ததைக் கண்டு, அவர் நிரம்பவும் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைந்து, தமது அதரங்களில் அரும்பிய புன்னகையை ஒருவாறு அடக்க முயன்றவராய் அவளண்டை நெருங்கிவந்த வண்ணம், “என்ன லீலாவதி இன்னமும் சண்டைதானா, அல்லது சமாதானமா?" என்று சாந்தமான குரலில் வினவினார். அவர் வந்ததைக் கண்டு திடுக்கிட்டு எழுந்து நாணிக் குனிந்து மரியாதையாகவும் கிலேசத்தோடும் நின்ற லீலாவதி சிறிது நேரம் தயங்கியபின், 'நேற்றுராத்திரி நாம் சண்டை போட்டது போதாதா? இன்னமும் சண்டைபோட உங்களுக்கு ஆசையா? நீங்கள் சண்டைபோட ஆரம்பித்தால் கூட, நான்சமாதானந்தான் செய்து கொள்வேன். நீங்கள்தான் ஆண்பிள்ளை சிங்கம். சண்டை போடவும், அடிக்கவும் வையவும் உங்களுக்கு அதிகாரம் உண்டு. உங்களுடைய ஒரு கை அடித்தால், இன்னொரு கை அணைக்கும். புருஷன் பெண்ஜாதி என்றால், ஏதோவிஷயத்தில் கொஞ்சம் மனஸ்தாபம் இருக்கிறது வழக்கந்தான். கோப சமயத்தில் ஏதோ ஆத்திரமான வார்த்தைகளை உபயோகிக் கிறதும் வழக்கந்தான். அதையெல்லாம் ஒரு பெருத்த சண்டை என்றா நினைக்கிறது? அப்படித்தான் நானென்ன ராத்திரி உங்களிடம் அதிக தவறாக நடந்து கொண்டது? ஒன்றுமில்லையே!' என்று கொஞ்சலாகப் பேசினாள். அவளது பணிவு நிறைந்த நயமான சொற்களைக் கேட்ட மாசிலாமணிப் பிள்ளை அளவற்ற மகிழ்ச்சி அடைந்து, தாம்