முதற் பதிப்பின் முன்னுரை வரப்புயர நீருயர நீருயர நெல்லுயர, நெல்லுயரக் குடியுயர என்று ஒரு நாட்டின் மேன்மைக்கு அச்சாணியாக உள்ள தொழில் விவசாயமே என்ற குறிப்பைத் தமிழ் மூதாட்டி அவ்வை அழகாக உணர்த்தியுள்ளார். விவசாயம் என்ற சொல்லே பொதுவாகத் தொழில் என்றே பொருள்படுவதாக இருந்தாலும். தமிழுக்கு அது வரும்போது உழவுசெய்து பயிரிடும் தலையாய தொழிலையே குறிப்பிடும் முழுமையைப் பெற்றிருக்கிறது. சுழன்று மேர்ப்பின்ன துலகம் என்றும் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றும் வள்ளுவர் இத்தொழிலின் புகழை இசைக்கிறார். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்று இந்நாள் நூற்றாண்டு விழாவுக்குரிய புதுயுகக் கவிஞன் பாரதி போற்றினான். நாங்கள் சேற்றிலே கால் வைத்தால்தான் நீங்கள் சோற்றிலே கை வைக்க முடியும் என்று கவிஜோதி அவர்களின் புதுக்கவிதைத் துணுக்கும் முழக்குகிறது. இவ்வாறெல்லாம் கவிஞர்களால் புகழப்பட்டிருக்கும் உழவுத் தொழிலைச் செய்பவரை நாயகர்களாக்க வேண்டும் என்ற வெகுநாளைய ஆவலே இப்புதினம் உருவாகக் காரணமாக இருந்தது. பயிர்த்தொழில் செய்யும் மக்களைப் பற்றியும். அவர்கள் உதிரம் தேய்த்து உழைப்பைக் கொடுக்கும் களங்களையும். அவர்களையும் ஒருங்கே உடமையாக்கிக்கொண்ட மேற்குலத்தாரான ஆண்டைகள் குறித்தும். எனது சொந்த வாழ்வில் நேரிடையான பரிச்சயங்களுக்கும் தொடர்புகளுக்கும் வாய்ப்புக்கள் இல்லையெனினும், சின்னஞ்சிறு பிராயத்திலேயே இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டுவிட்டேன். நந்தன் சரித்திரத்தை எங்கள் சிற்றுரில் பல கதாகாலட்சேப பாகவதர்கள் விரித்துரைக்கும் சந்தர்ப்பங்களில் ஒன்றைக்கூட நான் நழுவவிட்டதில்லை. முன் வரிசைப் பொட்டு பொடிசுகளிடையே நானும் ஒருத்தியாய் முழுசும் தூங்காமல் விழித்திருந்து, பாகவதர் பாடும் பாடல்களில் சொக்கி இருந்ததுண்டு - வேதியருக்கும். உழவு செய்ய வேண்டிய சேரி நந்தனுக்கும் இடையே ஏற்படும் ரசமான விவாதங்களை நொண்டிச் சிந்தில் அமைந்த எளிய பாடல்களைத் திருப்பித் திருப்பிச் சொல்லிப்பார்த்துக் கொண்டதுண்டு. நண்டைப் புசித்துக் கள்ளைக் குடித்துக்கொண்டு காட்டேறி வீரனுக்குப் பூசைபோடும் மக்களே சேரியில் வாழ்பவர். இவர்களே சேற்றிலே உழைப்பவர்கள். இவர்களில் நந்தன் மேற்குலச் சாமியைப் பூசிக்கிறான். ஒன்றே குலம். ஒருவனே தேவன். சுவாமி ஒருவரே. பல பேரிட்டு அழைக்கிறோம் என்ற வாசகங்கள் அந்நாளில் என் போன்ற சிறுவர்களுக்கு மனதில் பதியும் வண்ணம் பாடமாய் அமைந்திருந்தன. சாமிகளிலும் மேற்குலம் கீழ்க்குலம் என்ற பாகுபாடுகள் உண்டு
பக்கம்:சேற்றில் மனிதர்கள்.pdf/5
Appearance