பக்கம்:மதன கல்யாணி-3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மதன கல்யாணி இருக்கலாம்" என்று கூறிய வண்ணம், வண்டியின் கதவைத் திறந்த விட்டவராய், "மெதுவாக இறங்குங்கள்" என்று அன்பாகக் கூறினார். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் நன்றியறிதலும் விசுவாசமும் பொங்கி எழுந்த மனத்தினளாய், "இன்றைய தினம் முழுதும் எங்களுக்காக நீங்கள் பட்டிருக்கும் பாட்டுக்கு நாங்கள் உங்களுக்கு என்ன தான் செய்யப் போகிறோம். இந்நேரம் நாங்கள் பங்களா விலேயே இருந்தால், எங்களுடைய கதி எப்படி முடிந்திருக்குமோ, நாங்கள் எப்படிப்பட்ட நரக வேதனைக்கு ஆளாகியிருப்போமோ! உங்களுடைய தயையினால் நாங்கள் பிழைத்தோம்; எங்களுக்கு ஏற்பட இருந்த இழிவு நீங்கியது" என்று கூறிய வண்ணம் கீழே இறங்கிய உடனே கோமளவல்லியம்மாளும், துரைஸானியம் மாளும் இறங்கி அன்னிய புருஷர்களிருப்பதைக் கருதி நாணமுற்ற வர்களாய்த் தங்களது தாய்க்குப் பின்புறமாக மறைந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் முன்னும், அந்த மூன்று ஸ்திரீகளும் பின்னுமாக நடந்து படிகளில் ஏறி பங்களாவிற்குள் சென்றனர். அந்த பங்களா முழுவதும் மின்சார விளக்குகள் தொங்கி ஜெகஜ்ஜோதியாக எரிந்து கொண்டிருந்தன. படிகளிற்குமேல் அகன்ற வழுவழுப்பான தாழ்வாரம் இருந்தது. ஆனால், அந்தக் கட்டிடத்தில் இரண்டு ஹால் களும், அவற்றிற்குள் செல்ல இரண்டு வாசல்களும் இருந்தன. அந்த இரண்டு வாசல்களும் முன் பக்கத்தின் தாழ்வாரத்திலேயே இருந்தன. முன்னால் சென்ற இன்ஸ்பெக்டர் அவர்களுக்கு வலது பக்கத்தி லிருந்த வாசலை நோக்கி நடந்து, "இப்படியே வாருங்கள். இந்த ஹால் தான் நீங்கள் இருப்பதற்கு வசதியாக இருக்கும். அந்த ஹாலுக்குள் குமாஸ்தாக்களுடைய மேஜை நாற்காலிகள் அடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஹால் படுக்கை முதலிய எல்லாக் காரியங்களுக்கும் செளகரியமாக இருக்கும்" என்று கூறிய வண்ணம் வலது பக்கத்து ஹாலின் வாசற்கதவண்டை சென்று அதைத் திறந்து வைத்தவராய், ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்க, வாசற் படியண்டை சென்ற கல்யாணியம்மாள் தனது பார்வையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/42&oldid=853440" இலிருந்து மீள்விக்கப்பட்டது