பக்கம்:மதன கல்யாணி-3.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 37 கொண்டிருந்தன. கல்யாணியம்மாளது பங்களாவிற்கும் போலீஸ் கமிஷனரது கச்சேரிக்கும் சுமார் இரண்டு மயில் தூரம் இருக்கலாம் ஆதலால், அவ்வளவு தூரம் செல்ல அரை நாழிகை நேரமாகிலும் பிடிக்கும் என்று கல்யாணியம்மாள் நினைத்து அந்த விஷயத்தில் எவ்வித சந்தேகமும் கொள்ளாதவளாக இருந்ததன்றி, அந்த இன்ஸ்பெக்டர் தங்களைக் காப்பாற்றும் பொருட்டு அவ்வளவு பாடுபடுகிறாரே என்ற ஒரு வியப்பும், நன்றியறிதலும், மதிப்பும் விசுவாசமும் கொண்டவளாக இருந்தாள். அந்த நிலைமையில் மோட்டார் வண்டி ஒரு பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தது. அந்த பங்களா நிரம்பவும் சிறியதாகவும், நாற்புறங்களிலும் பூந்தோட்டமும் மதிட்சுவரும் உடையதாகவும் இருந்தது. அதன் முன்வாசலில் மின்சார விளக்குக் கம்பமொன் றிருந்தமையால், அவ்விடம் மிகவும் பிரகாசமான இருந்து. கையில் கத்தி துப்பாக்கி களோடு இரண்டு போலீஸ் ஜெவான்கள் வாசலில் பாராக் கொடுத்துக் கொண்டு நின்றனர். மதிட்சுவரில் போலீஸ் கமிஷனர் கச்சேரி என்ற எழுத்துகள் எழுதப்பெற்ற ஒரு பலகை மாட்டப் பட்டிருந்தது. அந்த பங்களாவிற்கருகில் மோட்டார் வண்டி வந்த போது, ஜெவான் ஒருவன் கதவைத் திறந்து வைத்தான். வண்டி வாசலிற்கருகில் போய் விசையைத் தளர்த்தித் திரும்பி உள்ளே சென்றது. அவ்விடத்தில் நின்ற போலீஸ் ஜெவான்களையும், ஆபீசின் பெயர் எழுதப்பட்டிருந்த பலகையையும் கண்டவுடனே கல்யாணியம்மாளுக்கும் கோமளவல்லிக்கும் உயிர் வந்தது; "அப்பாடா தப்பினோம்" என்று அவர்கள் தங்களது மனத்திற் குள்ளாகவே நினைத்து மகிழ்ச்சியும் மயிர்க்கூச்சலும் அடைந்தனர். வண்டி பூந்தோட்டத்தின் வழியாகச் சென்று கட்டிடமிருந்த இடத்தில் போய், முன்னாலிருந்த படிகளின் அண்டையில் நின்றது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டரும் ஜெவான்களும் கீழே குதித்தார்கள். வேர்த்து விருவிருத்து இறைத்த மூச்சாக விடுத்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் வண்டிக்குள்ளே இருந்த கல்யாணி யம்மாளைப் பார்த்துப் புன்னகை செய்து, "அம்மணி இனிமேல் கொஞ்சமும் பயமில்லை. எவனும் இங்கே வரமுடியாது. இன்று ராத்திரி முழுதும் நீங்கள் கொஞ்சமும் கவலையின்றி இங்கே