□ராஜம் கிருஷ்ணன்
19
எல்லோருக்கும் அவள் கடமைப்பட்டவள். பிரசவ காலத்தில் கூடத் தாயார் வந்து இருபத்திரண்டு நாட்கள் மட்டுமே இருந்திருக்கிறாள். பிறகு மெள்ள மெள்ள அவள் தன் வேலை, குழந்தை வேலை என்று கவனித்துக் கொள்வாள். இரண்டு மாசங்களில் முழு ‘சார்ஜை’யும் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
அந்தக் காலத்தில் அவள் கணவனுக்குச் சென்னையில்தான் அலுவலகம் இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளும் சேரிக் குழந்தைகள் போல் உடம்பில் துணியில்லாமல் இருக் கும். கிரிஜாவுக்குத் தன் சிநேகிதிகளோ. மாணவிகளோ எவரேனும் வந்துவிட்டால் வெட்கம் பிடுங்கித் தின்னும்!
பிறகு குழந்தைகளைக் கண்டித்துத் தன்னைத் தொடக் கடாது என்று பழக்கப்படுத்தினாள். பெண் குழந்தைகள். அவர்களுக்கு இளமையில் தாயின் அன்பான அரவணைப்பும் தொட்டுணரும் மகிழ்ச்சிகளும் அந்த இளம் பருவத்தில் மறுக்கப்பட்டன! இப்போது ஆண்குழந்தை என்று ‘பரத்’துக்கு அந்தக் கண்டிப்பு இல்லை! துணி படாமல் தொடலாம். தொட்டாலும் பிள்ளைக் குழந்தை!
“ஸ்வீட் நெல்லிக்காய் வொண்டர்ஃபுல்...கிரி! என்ன சும்மா ஷ்... என்ன இது? எதுக்குக் கண்ணிர் விடறீங்க? இதுதான் எனக்குப் பிடிக்கல...”
கிரி வெட்கத்துடன் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். தட்டை இழுத்துக் கொண்டு பரிமாறிக் கொள்கிறாள்.
“...நீங்க எக்ஸ்லண்ட் குக் கிரி. சாம்பாரும், இந்த சீஸ் கறியும் பிரமாதமாயிருக்கு. இதுல என்ன போட்டிருக்கிறீங்க?
“வேறும் வெங்காயமும் பட்டாணியுந்தான்.”
மேசையில் இவளுடன் அமர்ந்து, எச்சிலுமில்லை, பத்து மில்லை என்று எல்லாவற்றையும் ஒரே கையினால் தொட்டுக்