உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பற

தலைமாண பாங்களுக்குத்

நற்றிணை

இரண்டாம் தொகுதி

201. திருநல உருவின் பாவை!

பாடியவர் : பரணர். பரணர். திணை:

பாங்கற்குத் தலைமகன் உரைத்தது.

.....

துறை : கழறிய

[(துறை விளக்கம்) தலைமகன், ஒரு தலைவிபால் காத லுற்றான். 'அது பொருந்தாது' எனப் பாங்கன் அதனை மறுத்து உரைக்கின்றான். அப் பாங்கனுக்குத் தனது காதல் நிலையைத் தெளிவுபடுத்தி உரைப்பதுபோலத், தலைவனின் கூற்றாக அமைந்த செய்யுள் இது.)

மலையுறை குறவன் காதல் மடமகள்

பெறலருங் குரையள் அருங்கடிக் காப்பினள் சொல்லெதிர் கொள்ளா இளையள் அனையள் உள்ளல் கூடா தென்போய்-மற்றும் செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லித் தெய்வம் காக்கும் தீதுதீர் நெடுங்கோட்டு அவ்வெள் ளருவிக் குடவரை யகத்துக் கால்பொரு திடிப்பினும் கதழுறை கடுகினும் உருமுடன் றெறியினும் ஊறுபல தோன்றினும் பெருநிலம் கிளறினும் திருநல வுருவின் மாயா இயற்கைப் பாவையின் போதல் உள்ளாள் என் நெஞ்சத் 'தாளே!

10

5

·

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/15&oldid=1629804" இலிருந்து மீள்விக்கப்பட்டது