பக்கம்:மதன கல்யாணி-1.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#90 மதன கல்யாணி

உடனே மீனாகூஜியம்மாள், “இங்கே அப்படி ஒன்றும் விபரீத மான காரியம் நடந்து விடவில்லை. நேற்று சாயுங்காலம் அவன் இவளுக்கு வீணை கற்றுக் கொடுக்கும் போது, நான் ஏதோ அவசரமான காரியத்தின் பொருட்டு கொஞ்ச நேரம் வெளியில் போக நேர்ந்தது. போய்விட்டுத் திரும்பி வந்து பார்க்கையில், அவன் தன்னுடைய வேலையாகிய வீணை கற்றுக் கொடுப்பதை மாத்திரம் செய்துவிட்டுப் போகாமல், தனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் எல்லாம் தலையிட்டு இவளிடம் அதிகப் பிரசங்கமாக ஏதேதோ உளறிக் கொண்டிருந்தான். அவன் பேசியது அவ்வளவு பெரிய விஷயமல்ல ஆனாலும் அந்த அதிகப் பிரசங்கியை உள்ளே சேர்க்கக்கூடாது என்று நினைத்து, நான் உடனே அவனை இனி இங்கே வரவேண்டாம் என்று சொல்லி வெளியில் அனுப்பிவிட்டேன். இந்த விஷயத்தை உங்களுக்குச் சொல்லி அனுப்பினால் நீங்கள் ஏதேனும் வித்தியாசமாக நினைத்து விடப் போகிறீர்களே என்று நினைத்தே சொல்லியனுப்பவில்லை. இப்போது நீங்கள சொல்வதைப் பார்த்தால், அவன் எதையும் செய்யக் கூடிய அயோக்கியன் என்றும், இங்கே இன்னும் சில நாட்கள் வந்திருந்தால் அவன் உங்களிடம் நடந்து கொண்டது போல, இங்கேயும் அயோக்கியத்தனம் செய்திருப்பான் என்றும் நம்ப வேண்டியிருக்கிறது; நல்ல வேளையாய்ப் போய்விட்டது. அது போகட்டும்; அவன் உங்களிடத்தில் ஏதோ வாலையாட்டி னான் என்பது தான் எனக்கு நிரம்ப ஆச்சரியமாக இருக்கறிது!” என்றாள்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள், “நீங்கள் இப்போதே இவ்வளவு ஆச்சரியப்படுகிறீர்களே! நான் முழு விவரத்தையும் சொன்னால், அது கனவோ நினைவோ என்று கூட நீங்கள் சந்தேகித்து விடுவீர்கள். இருந்து இருந்து அவன் நல்ல ஆளைப் பொறுக்கி எடுத்தான் உலகத்தில் அவனுக்குத் தகுந்த சிறு பெண்கள் எத்தனையோ பேர்கள் இருக்க, அவர்களை எல்லாம் விட்டு, சாகிறகாலத்தில் சங்கரா சங்கரா என்றபடி அவனுடைய ஆசை எல்லாம் ஒரு கிழவி இடத்திலா ஏற்பட வேண்டும் ஆளைப் பார்த்தால் சித்திரப்பதுமை போல மகா ஒழுங்காக இருக்கிறான். அவனுடைய துர்ப்புத்தியோ அசாத்தியமாக இருக்கிறது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/208&oldid=649652" இலிருந்து மீள்விக்கப்பட்டது