உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

பாடிய பெருந்தேவனார் என்று அறிகின்றோம். தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய சான்றோர்கள் இந்நூற் செய்யுட்களைத் தங்களுடைய பேருரைகளிடையே பலவிடங்களில் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அவைபற்றிய குறிப்புக்களையும் இந்நூற் பதிப்பில் தந்துள்ளேன். அன்பர்கள் அவ்வுரைகளிடையே எவ்வாறு பொன்னிடை இழைத்த மணியென இந் நற்றிணைச் செய்யுட்கள் ஒளிசெய்கின்றன என்று கண்டறிந்தும் இன்புறல் வேண்டும்.

i

இந் நற்றிணையின் நயத்தை நாடறியவும் நாமறியவும் உதவியாக, ஏற்ற நல்லுரையினைத் தம்முடைய பரந்து செறிந்த தமிழறிவுச் சால்பால் வகுத்து உதவிய சிறப்பினர் பின்னத்தூர் திரு. நாராயணசாமி அய்யர் அவர்களாவார். அவர் களின் ஈடிணையற்ற வள்ளன்மையை உளங்கொண்டு போற்றி, அவர்களின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தி, இத் தெளிவுரை யினைப் படைத்து வணங்குகின்றேன். அவர்களின் புகழ் என்றும் நின்று நிலவும் ஏற்றமிகு தமிழ்ப்பெரும் புகழாகும்!

திருமிகு அய்யரவர்கள் தஞ்சைப் பகுதியின் பின்னத் தூரிலே தோன்றியவர்கள். தமிழும் வடமொழியும் கற்றுத் துறைபோகிய சான்றோர். திருமறைக் காட்டிலிருந்த பொன்னம்பலம் பிள்ளை அவர்களின் நன்மாணவராகித் தம் முடைய புலமைக்கு மேலும் ஒளியேற்றிக் கொண்டவர். அய்யர் அவர்கள் 1914ஆம் ஆண்டில் அமரரானபோதும், தமிழ் மாணவர் நெஞ்சங்களில் என்றும் நின்று நிலவுகின்ற சாவா நிலையினைப் பெற்றிருப்பவரே ஆவர்.

அய்யர் அவர்களின் தொண்டின் பெரும் பயனாற் கிடைத்த நற்றிணை நயத்தை நாட்டினர் அறிந்து பயன்பெற்று வந்த போது, சித்தாந்த கலாநிதியும் தமிழ்ப்பெருங் கடலுமான ஒளவை திரு.சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள். பலகாலம் நுணுக்கமாக ஆராய்ந்தும், பல செய்திகளையும் முயன்று முயன்று சேகரித்தும், பேருரைப் பதிப்பு ஒன்றையும் வெளியிட் டுள்ளார்கள். ஒளவையவர்களின் பதிப்பு, ஆழ்ந்தகன்ற பெரும்புலமையின் செறிவாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/7&oldid=1636790" இலிருந்து மீள்விக்கப்பட்டது