உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

41


and

& drin

215. தங்கினால் என்னவோ?


பாடியவர்: மதுரைச் சுள்ளம் போதனார். திணை: நெய் தல். துறை : (1) பகற்குறி வந்து மீள்வானை, 'அவள் ஆற்றுந் தன்மையள் அல்லள்; நீயிர் இங்குத் தங்கற்பாலீர்; எமரும் இன்னதொரு தவற்றினர்' எனத் தோழி தலைமகற்குச் சொல்லியது. (2) இரவுக்குறி மறுத்து வரைவு கடாயதூஉம் ஆம்.

[(து.வி.) பகற்குறி இரவுக்குறி வருவானை மண முயற்சி களிலே மனஞ்செலுத்துமாறு தோழி தூண்டுவதற்குச் சொன்னதாக இச் செய்யுளைக் கொள்க.] ச்

குணகடல் இவர்ந்து குரூஉக்கதிர் பரப்பிப் பகல்கெழு செல்வன் குடமலை மறையப் புலம்புவந் திறுத்த புன்கண் மாலை இலங்குவளை மகளிர் வியனகர் அயர, மீன்நிணம் தொகுத்த ஊன்நெய் ஒண்சுடர் நீல்நிறப் பரப்பில் தயங்குதிரை உதைப்பக் கரைசேர்பு இருந்த கல்லென் பாக்கத்து இன்றுநீ இவணை யாகி எம்மொடு தங்கின் எவனோ தெய்ய? செங்கால் கொடுமுடி அவ்வலை பரியப் போகிய கோட்சுறாக் குறித்த முன்பொடு வேட்டம் வாயாது எமர் வாரலரே!

5

10

தெளிவுரை : சேர்ப்பனே! கீழைக் கடலினின்றும் எழுந்து வந்து நல்ல நிறத்தையுடைய கதிர்களைப் பரப்பியவனாகப் பகற்பொழுதைச் செய்து விளங்கிய செல்வனாகிய ஆதித்த ம் மேலைத்திசைக்கண் மலையிடத்தே போய் மறைவா னாயினன். துன்பத்தை முற்படுத்தியதாக வந்து தங்கிய புன்கண்ணையுடைய மாலையும் வந்தது. இலங்கியவளையணிந்த இல்லுறை மகளிர்கள் தத்தம் மாளிகையிலே இருந்தபடியே இம் மாலைப்போதினை விரும்பி வரவேற்று இன்புறுவர். மீன் கொழுப்பை உருகச் செய்து தொகுத்த ஊனாகிய நெய்யினை வார்த்து ஏற்றியுள்ள ஒள்ளிய விளக்குச் சுடர் களின் ஒளியினை, நீலநிறக் கடற் பரப்பிலே அசையும் அலைகள் மோதிமோதி அலைக்கின்றன, இவ் வண்ணமாகிய DOD

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/47&oldid=1641381" இலிருந்து மீள்விக்கப்பட்டது